प्रसंख्यानेऽप्यकुसीदस्य सर्वथा विवेकख्यातेर्धर्मेघः समाधिः ।।29।।
ப்ரஸம்°க்²யாநே'ப்யகுஸீத³ஸ்ய ஸர்வதா² விவேகக்²யாதேர்த⁴ர்மேக⁴: ஸமாதி⁴: || 29||
ப்ரஸம்°க்²யாநே அபி = ப்ரக்ருதி- புருஷ- விவேக- ஞானத்தின் பலனான எல்லாவற்றையும் ஒன்றாக காண்பது (விவேக ப்ரசங்க்யானம்), எல்லாவற்றையும் அறிவது (ஸர்வ க்ஞாத்ருத்வம் ) முதலானவற்றில் கூட; அகுஸீத³ஸ்ய = ஆசை வைக்காதவனுக்கு; ஸர்வதா² = எப்போதும், நிரந்தரமாய்; விவேக க்²யாதே: =விவேக ஸாக்ஷாத்காரம் ஏற்படுவதால்; த⁴ர்மேக⁴: ஸமாதி⁴: = தர்மமேகஸமாதி ஏற்படுகிறது.
விவேக க்யாதியால் எல்லாப்பலன்களையும் தன் அதிகாரத்தில் வைத்து இருக்க முடிகிறது; எல்லாவற்றையும் அறிய முடிகிறது. ஆனாலும் இதில் நாட்டம் போனால் முன்னேற்றம் இராது. அதனால் இதிலும் பரிணாமம் முதலிய தோஷத்தை காண்பவனுக்கு இதில் ஆசை வராது. அப்படிப்பட்டவனுக்கு எப்போதும் விவேக ஸாக்ஷாத்காரமே இருக்கிறது. வேறு ஒரு ப்ரத்யயமும் (தடையும்) ஏற்படுவதில்லை. அதுவே தர்மமேகஸமாதி ஆகும். அசுக்லா க்ருஷ்ண யோகஜ தர்மத்தை (பாதம் 4 சூத்திரம் 7) இது வர்ஷிப்பதால் இந்த பெயர் வந்தது.
8 comments:
வணக்கம் திவா சார்,
உங்க வலைப் பூவை பார்த்தேன் .. ரொம்ப மகிழ்ச்சி ..
அருமையான பதிவுகள் ... தொடரட்டும் தங்கள் பணி ...
அப்புறம் உங்க வலைப் பக்கத்தில் FEED BURNER வழியா மெயிலில் பெறுவதற்கான கெஜட்டை ஏற்பாடு செய்யுங்களேன்,
அப்புறம் வாய்ப்பிருக்கும்போது
http://sivaayasivaa.blogspot.com/
இங்கேயும் வந்துட்டு போங்க சார்..
நன்றி. சிவயசிவ
நல்வரவு ஜானகிராமன். நீங்க சொன்ன விஷயங்களை பார்க்கிறேன்.
இந்த வலைப்பூவுக்கு எப்படி வந்தீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா? :-))
சுக்லா க்ருஷ்ண யோகஜ தர்மத்தை (பாதம் 4 சூத்திரம் 7) இது வர்ஷிப்பதால் இந்த பெயர் வந்தது.//
சுத்தம்! :( இதைக் கொஞ்சம் இன்னும் விளக்கினால் நன்றியுடையவளா இருப்பேன்.
விவேக க்யாதியால் எல்லாப்பலன்களையும் தன் அதிகாரத்தில் வைத்து இருக்க முடிகிறது; எல்லாவற்றையும் அறிய முடிகிறது. ஆனாலும் இதில் நாட்டம் போனால் முன்னேற்றம் இராது.//
இது ஓகே, புரியுது. அப்புறம் தான்! :(
சுத்தம்! :( இதைக் கொஞ்சம் இன்னும் விளக்கினால் நன்றியுடையவளா இருப்பேன்.//
அதுக்குத்தான் பாதம் 4 சூத்திரம் 7 பார்க்கச்சொல்லி ரெபரன்ஸ் கொடுத்தேன்.
அசுக்லா க்ருஷ்ண = புண்ணியமோ பாபமோ இல்லாத; யோஜக = சேர்க்கும்; தர்மத்தை = இயல்பை; வர்ஷிக்கும் = தரும். தர்மம் ஏக சமாதி என்று பெயர் வந்தது இதனால்தான்.
அதனால் இதிலும் பரிணாமம் முதலிய தோஷத்தை காண்பவனுக்கு இதில் ஆசை வராது.//
சாதாரணமாக சித்துவிளையாட்டுகளைச் செய்து அதிலேயே லயிப்பவர்களை இங்கே குறிப்பதாய் எடுத்துக்கலாமா?? அல்லது இன்னமும் ஆழமாய்ப் போயும் பற்றைக் கொஞ்சம் கொஞ்சமாய் அறுப்பவர்களையா?? எனக்கு இங்கே கொஞ்சம் சந்தேகம்; ஞானிகள், அதாவது யோகிகள்னு இந்த இடத்தில் வைச்சுக்கலாம்; அவங்களோட யோகத்தினால் அவங்களுக்குக் கிடைக்கப் போகும் கடைசி சமாதி நிலையினால் உலக மக்களுக்குக் கிடைக்கும் பயன் என்ன?? எல்லாரும் இப்படி சமாதி நிலையில் போய் அதிலேயே ஐக்கியமாகிவிட்டால் என் போன்ற சாதாரணமான மக்களுக்கு என்ன பலன் கிடைக்கும்?? அவங்க தங்களோட சொந்த ஆசையைத் தான் பூர்த்தி செய்துக்கறாங்களோனு ஒரு பக்கம் தோணுது. இதுவும் ஒரு வகை ஆசை/காமம் தானே?? கேட்கிறது தப்பு என்றால் மன்னிக்கவும். வெளியிடவேண்டாம். தனி மடலில் பதிலைச் சொல்லுங்க.
//சாதாரணமாக சித்துவிளையாட்டுகளைச் செய்து அதிலேயே லயிப்பவர்களை இங்கே குறிப்பதாய் எடுத்துக்கலாமா?? அல்லது இன்னமும் ஆழமாய்ப் போயும் பற்றைக் கொஞ்சம் கொஞ்சமாய் அறுப்பவர்களையா??//
சித்தில் போனால் மோக்ஷம் கிடைக்காது. சிலர் இருக்குமிடத்தில் சித்து தானாக நிகழலாம். அது வேற சூட்சுமமான விஷயம்.
பரிணாமம் முதலிய தோஷத்தை காண்பவன்னு சொன்னது மேலும் பற்றை அறுப்பவர்களையே.
// எனக்கு இங்கே கொஞ்சம் சந்தேகம்; ஞானிகள், அதாவது யோகிகள்னு இந்த இடத்தில் வைச்சுக்கலாம்; அவங்களோட யோகத்தினால் அவங்களுக்குக் கிடைக்கப் போகும் கடைசி சமாதி நிலையினால் உலக மக்களுக்குக் கிடைக்கும் பயன் என்ன??//
யோகி இருக்குமிடத்தில் இயற்கை உயிர்ப்புடன் இருக்கிறது. தானாக பல 'நல்ல' விஷயங்கள் நடக்கும். ஒருவர் யோகத்தால் உலகத்துக்கு பயன் பெரிசா ஒண்ணுமில்லை. ஒரு வழியில் இது சுய நலமே. தன்னை பொறுத்தவரை அவர் மாயையை அறுத்துக்கொள்கிறார் .
//எல்லாரும் இப்படி சமாதி நிலையில் போய் அதிலேயே ஐக்கியமாகிவிட்டால் என் போன்ற சாதாரணமான மக்களுக்கு என்ன பலன் கிடைக்கும்?? //
எல்லாராலும் இப்படி ஆக முடியாது. நீங்க நினைக்கிற பயன் இந்த வழியில் இருந்து கொண்டு இன்னும் பயணித்துக் கொண்டிருப்பவர்களால் கிடைக்கும்.
//அவங்க தங்களோட சொந்த ஆசையைத் தான் பூர்த்தி செய்துக்கறாங்களோனு ஒரு பக்கம் தோணுது. இதுவும் ஒரு வகை ஆசை/காமம் தானே?? //
evolved selfishness!
//கேட்கிறது தப்பு என்றால் //
thappillai.
ஜானகி ராமணன், நீங்க சொன்னதை செஞ்சாச்சு!
Post a Comment