तदा सर्वावरणमलापेतस्य ज्ञानस्याऽऽन्त्याज्ज्ञेयमल्पम् ।।31।।
ததா³ ஸர்வாவரணமலாபேதஸ்ய ஜ்ஞாநஸ்யா''ந்த்யாஜ்ஜ்ஞேயமல்பம் || 31||
ததா³ = அதனால் (தர்மமேகஸமாதியால்) ஸர்வ =எல்லா; ஆவரண = மறைப்பு; மலா = அழுக்கு; பேதஸ்ய = விலகுதல்; ஜ்ஞாநஸ்ய = ஞானத்தின்; ஆநத்யாத் = ஆநந்தத்தின்; ஜ்ஞேயம் = அறியத்தக்கன; அல்பம் = மிகக்குறைவாக (ஆகிறது)
தர்மமேக ஸமாதியில் இல்லாதபோது சித்தத்தின் நிலை என்ன?
சித்தம் முதலில் தமோ குணத்தால் மூடப்பட்டு இருந்தது. அதனால் ரஜோ குணம் மட்டுமே அதை ஏதோ சில விஷயங்களில் அதை தூண்ட முடிந்தது. சிறிது தமோ குணம் விலக பின் ஏதோ சில வஸ்துக்களை மட்டும் க்ரஹிக்கும் சக்தி பெற்றது.
தர்மமேகஸமாதியை அடைந்த சித்தத்தின் ரஜோ தமோ அழுக்குகள் முழுதும் அழிக்கப்படுகின்றன. சித்த தத்துவத்தை மறைத்த அவித்யை முழுதும் விலகுகிறது. ஆதலால் சித்தம் நிர்மலமாகிறது. சாதாரணாமாக அறியத்தக்க பிரபஞ்சம் மிகச்சிறிதாக ஆகிறது. எப்படி ஒரு குடம் கடலின் நீர் அனைத்தையும் அடக்க போதுமானதில்லையோ, ஒரு பூச்சி வானத்தை மறைக்க போதுமானதில்லையோ அது போல் சித்தத்தின் அறியும் திறனுக்கு தீனி போட இந்த அறியத்தக்க பிரபஞ்சம் போதுமானதில்லை. இந்த நிலை பர வைராக்கியம் என்றும் சொல்லப்படும்.
2 comments:
இந்த நிலை பர வைராக்கியம் என்றும் சொல்லப்படும்.//
பிரபஞ்சமே ஒரு தூசி மாத்திரம் என்ற உணர்வு ஏற்படுமா?? அல்லது தானே தன்னிலிருந்து பிரிந்து விட்டாற்போல் தோன்றுமா?? இதிலே ப்ரக்ருதி/இயற்கையுடன் ஐக்கியமாவது தானே ஸமாதிநிலை எனப்படுகிறது??
(அசட்டுத் தனமாய்க் கேட்கிறேனோ?):(
//பிரபஞ்சமே ஒரு தூசி மாத்திரம் என்ற உணர்வு ஏற்படுமா?? //
ஆமாம்.
//ப்ரக்ருதி/இயற்கையுடன் ஐக்கியமாவது தானே ஸமாதிநிலை எனப்படுகிறது??//
அடிப்படையிலே ஆமாம் என்றாலும் இதில் பல விதங்கள் இருக்குன்னு முதல் பாதத்திலே பாத்தோம் இல்லையா?
Post a Comment