53. ஒஹோ! அது சரி, ப்ரணவம் தெரியும், அது ஓங்காரம். வ்யாஹ்ருதி என்கிறதென்ன?
பூர், புவ, ஸுவ: என்கிறதுதான் முதல் மூன்று வ்யாஹ்ருதிகள்.54. அடுத்த செயல் என்ன?
ப்ராணாயாமம் செய்து மார்பில் கைகளை வைத்துகொண்டு 'அஸாவாதித்யோ ப்ரஹ்ம' என்ற த்யானமே அடுத்த படி. சும்மா கடனுக்கு செய்யாமல் சற்றே கவனத்துடன் சில நொடிகளாவது இதை செய்வது மோக்ஷ சாதனமாகும். 55. அதெப்படி மோக்ஷ சாதனம்?
தினசரி கொஞ்ச நேரம் செய்ய இது நம்மை ப்ரஹ்ம நிஷ்டையில் அமர்த்தும். இந்த ஜன்மத்திலேயே நம் குருவை கண்டு பிடித்து உபதேசம் பெறுவோம். ஞானமும் நிஷ்டையும் முக்தியும் கைகூடும். மனித பிறவி எடுப்பதே இதற்காகத்தான். இதை பயன்படுத்திக்கொள்ளாவிட்டால் உணவிருந்தும் உண்ணாமல் பட்டினி கிடப்பவன் போலாவோம்.56. ம்ம்ம்ம்ம்.. அப்புறம்?
நவ க்ரஹங்களுக்கும் கேசவன் முதலான 12 நாமங்களை சொல்லியும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.57. தர்ப்பணமா? அது அப்பா அம்மா இல்லாதவங்கதானே செய்வாங்க?
அப்படி இல்லை. தர்ப்பணம் என்றால் திருப்தி செய்வது என்றே பொருள். இப்படி சொல்ல பிடிக்கவில்லையானால் அர்க்யம் என்றும் சொல்லலாம். 58. எதுக்கு இவங்களை திருப்தி செய்யணும்? பரமாத்மாவை உபாசிக்கிற போது இவங்க எதுக்கு?
என்னதான் அரசு உத்திரவு இருந்தாலும் அரசாங்கத்தில் வேலை செய்கிறவர்களை திருப்தி செய்தால் வேலை சீக்கிரம் நடப்பது போல நடைமுறையில் தினசரி செயல்களுக்கு உதவறவங்களை திருப்தி செய்கிறோம். ஏன் விஷ்ணு என்றால் அவரே மோக்ஷத்தை தருகிறவராம்.59. சரி அடுத்து?
காயத்ரி ஜபம் செய்கிறேன் என்று சங்கல்பம் செய்து ஜபம் செய்ய வேண்டும். ஜபத்தில் மனசு ஊன்ற ப்ராணாயாமம் செய்ய வேண்டும்.60. ப்ராணாயாமம் பத்தி சொல்லுங்க.
அதை தனியா விரிவாகவே பார்க்கலாம். இப்போதைக்கு மனசை ஒரு முகப்படுத்த அது உதவுதுன்னு தெரிஞ்சா போதும்.
6 comments:
நல்ல அரிய தகவல்கள். நன்றி.
சின்னதாய் இருப்பதாலும், கேள்வி பதில் உத்தியாலும் படிக்கவும் சுலபம்.
நன்றி!
அத்தனை கமெண்ட் போட்டதுக்கு ஒரே ஒரு பதில், அக்கிரமமாய் இல்லை?? :P
இல்லை! ஹஹஹஹஹா!
எல்லா கமெண்டும் மாடரேஷன் பக்கதிலேந்து பப்ளிஷ் ஆச்சு! ஒவ்வொண்ணா தானே பதில் போடனும்?
Post a Comment