ஐசாக் ஆப் ஜெர் ஒரு யூத ராபி.
ஒரு நாள் ஒரு சக்கிலி அவரிடம் வந்தான்.
" ஐயா என் காலை ப்ரார்த்தனைகள் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும்.”
“என்ன பிரச்சினை அப்பா?”
என் தொழில் ஏழை தொழிலாளர் சம்பந்தப்பட்டது. தினசரி இரவு என் இடத்துக்கு வரிசையாக பல தொழிலாளர்கள் வருவர். அவர்களுக்கு இருப்பதோ ஒரே ஒரு ஜோடி காலணிகள். அவற்றை பழுது நீக்கி கொடுத்தால்தான் அவர்கள் அடுத்த நாள் வேலைக்கு போக முடியும். ஏறக்குறைய இரவு முழுவதும் வேலை செய்கிறேன். பல நாட்கள் காலையில் அவர்கள் வரும் வரைக் கூட வேலை நிறைவு பெறாமல் இருக்கிறது. என் காலை ப்ரார்த்தனையை என்ன செய்வது?”
“இது வரை என்ன செய்தாய்?”
"சில சமயம் அவசர அவசரமாக ப்ரார்த்தனையை முடித்துவிட்டு வேலையை தொடருவேன். ஆனால் அப்புறம் இப்படி செய்துவிடோமே என்று வருந்துவேன். சில நாட்கள் ப்ரார்த்தனையை விட்டுவிட்டு வேலை செய்வேன். ஆனால் அப்படி வேலை செய்யும்போது என் இதயம் இபப்டிச் சொல்லி பெருமூச்சுவிடும்: நான் எவ்வளவு துரத்ருஷ்டசாலி! காலை ப்ரார்த்தனையை கூட செய்ய முடியவில்லையே!”
ராபி சொன்னார்: " நான் கடவுளாக இருந்தால் ப்ரார்த்தனையை விட இந்த பெருமூச்சை பெரிதும் மதிப்பேன்"
2 comments:
நான் கடவுளாக இருந்தால் ப்ரார்த்தனையை விட இந்த பெருமூச்சை பெரிதும் மதிப்பேன்"//
ஆமாம், இல்ல?? பல சமயங்களிலும் எல்லாருக்கும் நடக்கிற ஒண்ணு தான் இது. ஸ்லோகம் சொல்லணும்னு உட்கார்ந்தா பல தடங்கல்கள்; அதையும் மீறி மனசு சொல்ல முடியலையேனு தவிக்கும்.
அதனால்தான் இது நமக்கு ரெலவன்ட் ஆ இருக்கு!
Post a Comment