Pages

Friday, March 2, 2012

அண்ணா - 7


சுமார் பத்து வருஷத்துக்கும் மேலாக ஏறத்தாழ படுத்த படுக்கையாகவே இருந்து வந்திருக்கிறார். பின் வருஷங்களில் மாஹா மாயையின் சக்தியையும் உணர வைத்தார்! அப்படி இருந்த 'ஞானி' யா இப்படி இருக்கிறார், பேசுகிறார் என்று நினைக்கும் அளவுக்கு! சின்னக்குழந்தையாகவே ஆகிவிட்டார். வயிற்றில் கட்டி இருப்பதாக நிச்சயமாக நம்பினார். எல்லா மருத்துவ பரிசோதனைகளும் செய்து ஒரு பிரச்சனையும் கண்டு பிடிக்க முடியவில்லை! இப்படியும் அப்படியும் இருப்பார். ஞானி போலவும் பேசிக்கொண்டு இருப்பார். சாதாரணமாகவும் இருப்பார். குழந்தையாகவும் இருப்பார்! இவருடைய எஞ்சிய பிறப்பில் அனுபவிக்க வேண்டிய கர்மாக்களை அனுபவித்து தீர்த்தார் என்று எண்ணுபவர்கள் உண்டு. பலவித உபாதைகள் இருந்தன.

கடிதத்தில் எனக்கு இருக்கிறதை ஹாரஸ்கோப் உள்பட எந்த ஸ்கோப்பாலும் கண்டு பிடிக்க முடியாது என்று ஒரு முறை எழுதினார்.

புதிதாக யாரையும் பார்க்க மறுத்தார். யாரும் வருவதையும் தவிர்க்கும்படி கூறினார். கடைசி சில வருஷங்களில் அவரை அதிகம் பார்க்கவில்லை. வருஷம் 2-3 முறை சென்னை செல்லும்போது போய் பார்த்து நமஸ்காரம் செய்வதோடு சரி.

ஆரம்பத்திலேயே ஒன்றும் அதிகமாக உணவு உட்கொண்டவரில்லை. போகப்போக இதன் அளவும் குறைந்து கொண்டே போனது. கடைசி ஓரிரு வருஷங்கள் வெறும் திரவ ஆகாரம் என்றே கூட சொல்லலாம். இதை முழுங்கக் கூட கஷ்டப்பட்டார். கடைசி சில நாட்கள் ஒன்றுமே இல்லை. வேறு வழியாக உணவு செலுத்தப்படுவதையும் மறுத்தார்.

ஆனால் உடலில் சக்தி இல்லாமல் போகவில்லை. கடைசி வாரத்தில் மட்டும் ஒருவருக்கு 7 கடிதங்கள் எழுதி இருக்கிறார். அவற்றில் ஒன்று 37 பக்கங்கள்! ஒன்றில் மந்திரோபதேசம்!

சிவ ராத்திரிக்கு அடுத்த நாள் கடைசியாக பார்க்க நானும் என் மனைவியும் சென்று இருந்தோம். முகத்தில் இருந்த தேஜஸ் கொஞ்சமும் குறையவில்லை என்று தோன்றியது! ஒரு வருஷம் முன்னால் "நான் போன பிறகு கொடுக்க வேண்டும்" என்று சொல்லி வைத்து பத்திரப்படுத்தி இருந்த கவர் ஒன்றை அவரது உதவியாளரில் ஒருவர் கொண்டு வந்து கொடுத்தார். அதில் என் மனைவியின் முகவரி எழுதி உள்ளே அவரது போட்டோ ஒன்று இருந்தது!

என் வாழ்கையில் மஹா பெரியவாளை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. ஆனால் அவரது உபதேசங்களை எழுதியவரது ஆசீர்வாதங்களை பெற்றேன்! வழிகாட்டுதலை பெற்றேன்! இதற்கு கைமாறு என்ன செய்ய இயலும்?

-நிறைந்தது-

6 comments:

Kavinaya said...

என்ன சொல்வதென்று தெரியவில்லை. பணிவுடன் வணங்கிக் கொள்கிறேன். அம்பாளின் அருள் பெற்ற அவரையும், அவருடைய ஆசிகள் பெற்ற உங்களையும்.

yrskbalu said...

thanks for sharing.
you also doing same work now.
you also god instrument.
instrument talking about instrument
you can do it better than ganapathy in writing.
but not doing. this is always my standpoint.//
elephant not knowing its strength////

Jayashree said...

படித்துவிட்டேன்!ஸெட்டிங்க் ஏதாவது மற்றினேளா?ரொம்பவே நன்றாக இருந்தது .இன்னும் எழுதி இருக்கேளா எங்கேயாவதுன்னு பாக்க தோன்றியது.ரொம்ப thanks

திவாண்ணா said...

கவி நயா, நன்றீ!

திவாண்ணா said...

பாலு சார், எதோ ரைட்டர் ப்ளாக் மாதிரி இப்போ இருக்கிறது. பகவான் எழுத வைக்கும் போது எழுதுவேன்!

திவாண்ணா said...

ஜெயஸ்ரீ அக்கா, :-)  செட்டிங்க் ஒண்ணும் மாத்தலை.