Pages

Thursday, January 10, 2013

அத்ருஷ்டம் -2



சுப்பாண்டி அருமையான கேள்வியை கேட்டு இருக்கார். இப்படி சின்ன வயசிலே இப்படி அருமையான கேள்வி எல்லாம் கேட்கிறதை நினைச்சு சந்தோஷமா இருக்கு! சுப்பாண்டியின் சிந்தனைகள் வளர பகவானை வேண்டிக்கிறேன். அடுத்த கேள்வி……
:-))
சும்மா ஜோக்குக்கு!

பார்க்கிற பார்வை பொருத்து பதில் இருக்கு. அத்வைத நோக்கில ப்ரம்ஹம் ஒண்ணுதான் இருக்கு வேறு எதுவுமில்லை. அதனால் ஜீவனும் இல்லை பிறப்பும் இல்லை.

அடுத்த நிலையில...
ஜீவனும் பரமாத்மாவும் இருக்கு. ஜீவர்கள் படிப்படியாக முன்னேறி இறை நிலை அடையணும். ப்ரம்மம் ஸத்யம். அது அனாதி. அதாவது அதுக்கு துவக்கமும் இல்லை  முடிவும் இல்லை. அதே போல மாயைக்கும் துவக்கமும் இல்லை, முடிவும் இல்லை. இந்த மாயைதான் அகங்காரம்ன்னு ஒண்ணை உருவாக்கி ஜீவனுக்கு ஒரு தனி இருப்பை கொடுக்குது. இந்த மாயை உருவாக்கிய ஜீவர்களும் அனாதி. ப்ரலய காலத்தில் கூட இந்த ஜீவர்கள்மெழுகு உருண்டையில் இருக்கிற தங்க துகள்கள் போலஇருந்து பின்னால் மீண்டும் வெளிப்படுவர். மாயையால் தூண்டப்பட்டு செய்யக்கூடாத்தை செய்து கர்ம வினை சம்பாதித்திக்கொண்டு பிறப்பு இறப்பில் மாட்டிக்கொள்கிறார்கள். படிப்படியாக அனுபவத்தில் முன்னேறி, நல்ல வாசனைகள் அமையும் பட்சத்தில் ஆன்ம நாட்டம் ஏற்பட்டு அந்த பாதையில் போக ஆரம்பித்து,  ஏதோ ஒரு பிறப்பில் மாயையை நீக்கிக்கொண்டாலும் நீக்கிக்கொள்வார்கள். இப்படி செய்வது மிகச்சில ஜீவர்களே! அதனால ஜீவர்களுக்கும் உலக இயக்கத்துக்கும் குறைவிருப்பதில்லை.

நாம் பார்க்கிற சாதாரண உலக நிலையில் இருந்து பதிலை பார்க்கலாம்.
ஶ்ரீமத் பாகவதத்திலே ஒரு பகுதி. புத்தகத்தை சரியான ரெபரென்ஸ் கொடுக்க தேடினா அகப்படலை!
ஆரம்பத்தில் ப்ரம்மா சிருஷ்டிச்சவங்க எல்லாம் சம்சாரத்தில் ஈடு படாமல் ஞான நாட்டத்துடனே இருந்து ஞானிகளாகி போனார்கள். அடடா, நம்ம தொழில் பாதிக்கப்படுதேன்னு ப்ரம்ஹா கவலைப்பட்டார்.  அடுத்து வந்த ப்ரஜைகள்  மாயையில் விழுந்தாங்க.. அதனால அவங்க கர்மங்களில் ஈடுபட்டு  பிறப்பு இறப்பில் சுழல ஆரம்பித்தார்கள்.

No comments: