நம் எல்லோருக்கும் கண்ணன் இந்திரனுடைய கர்வத்தை அடக்குவதற்காக இந்த்ர பூஜையை நிறுத்தி கோவர்தன கிரிக்கு பூஜை செய்யுங்கள் என்று தன் மக்களை தூண்டிவிட்டதும் இந்திரன் கோபத்தில் அனுப்பி வைத்த புயல் மழைகளிலிருந்து மக்களை காக்க குடையாக கோவர்த்தன கிரியை தூக்கிக்கொண்டு நின்றதும் கதையாக தெரியும்.
அதன் பின் இந்திரன் கர்வம் அடங்கி கண்னனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டான். கண்ணனும் அவனை மன்னித்து வரம் கொடுத்தான். இந்திரன் தனக்கும் தன் சகோதரன் உபேந்திரனுக்கும் இந்த நாளில் மக்கள் பூஜை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். கண்ணனும் இசைந்து, போகி அன்று இந்த்ர பூஜையும் கோ பூஜையும் செய்ய வேண்டுமெனெ விதித்தான்.
வழக்கம் போல தாமதமாக பதிவு வந்துவிட்டது. மன்னிக்க வேண்டும். இயன்றவர்கள் செய்யவும். பூஜா விதானம் இந்த தொடுப்பில் இருக்கிறது.
http://anmikam4dumbme.blogspot.com/2013/01/blog-post_13.html
No comments:
Post a Comment