Pages

Tuesday, March 12, 2013

சிவ ராத்திரி அனுபவம்.

 
பல வருஷங்களுக்கு பிறகு சிவராத்திரிக்கு ஏகா தச ருத்ரம் சொல்லவில்லை. ஆரம்பகாலத்தில் எங்கள் பகுதி பிள்ளையார் கோவிலில் செய்து கொண்டு இருந்தோம். குருக்கள் மாறின போது ஜன ரஞ்சகமாக பஜனை வைக்க முடிவு செய்தார்கள். அதற்குள் வேத பாடசாலை செயலுக்கு வந்துவிட்டதால் நிகழ்வை அங்கே மாற்றிவிட்டோம். ஆறேழு வருடங்களாக அங்கேதான் சிவராத்திரி.

கடந்த மூன்று மாதங்களாக சளியால் நுரையீரல் பாதிப்பு திருப்பி திருப்பி வந்து கொண்டு இருந்தது. உடம்பு வேலை செய்ய கஷ்டப்பட்டது. சந்தேகத்தில் ரத்தத்தில் சர்க்கரை அளவை பார்த்தால் டபுள் செஞ்சுரி ட்ரிபிள் செஞ்சுரி என்று அது பாட்டுக்கு கிரிக்கெட் ஆடிக்கொண்டு இருந்திருக்கிறது! அதுதான் இயலாமைக்கும் களைப்புக்கும் காரணம் என்று தெரியவந்தது.

ஆக ஏகாதச ருத்ரம் நிகழ்வுக்கு போகும் நிலையில் இல்லை. இயலாமை ப்ரத்யட்சமாக தெரிந்தாலும் மனசில் ஒரு வருத்தம் இருந்தது போல் இருக்கிறது.

***
நேற்று என் ஜன்ம தினம். ஏனோ வழக்கமாக போகும் மருத்துவ மனையிலும் வேலை இல்லை. காலை எட்டு மணி போல சக ட்ரஸ்டி போன் செய்தார். நண்பர் ஒருவருடன் சிதம்பரம் வந்தேன். இன்று அமாவாசை. தர்பணம் செய்ய வேண்டும். சாப்பாட்டுக்கு அங்கே எங்காவது ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டார். எங்காவது என்ன, வீட்டுக்கே வந்துவிடுங்கள் என்றேன்

சுமார் 11 மணி போல வந்தார்கள். ட்ரஸ்டி, சிகாகோ கெல்லாக் மேனேஜ்மென்ட் இன்ஸ்ட்யூடில் வேலை பார்க்கும் நண்பர், இன்னும் ஒரு வயதான தம்பதிகள். நாலு அதிதிகளுக்கு உணவு அளித்து மகிழ்ந்தோம். கிளம்பும் முன் சிதம்பத்தில் நேற்று சிவராத்திரிக்கு இருந்தோம்; ப்ரஸாதம் கிடைத்தது என்று ப்ரஸாதம் கொடுத்தார்கள்! விபூதி, குங்குமம், வில்வம், புஷ்பங்கள், ஜாங்கிரி, மைசூர் பாக் என்று ஏகத்துக்கும்....!

இறைவன் கருணை மிக்கவன்!

22 comments:

எல் கே said...

Belated wishes

திவாண்ணா said...

நன்றி எல்கே!

Geetha Sambasivam said...

பிறந்த நாள் வாழ்த்துகள்/ஆசிகள். மைசூர்பாகு கிடைக்கலை/ ஆனால் வேறே ஸ்வீட் கிடைச்சது. சாப்பிட்டேன். :)))))

Jayashree said...

இறைவன் கருணை மிக்கவன்! Yap indeed!எல்லா மதமும் ஒத்துக்கொண்ட விஷயம்:)
Bismillah ir-Rahman ir-Rahim.
"In the name of God, most Gracious, most Compassionate".
உடம்பு தேவலையா? Winter cough and cold தானே? உங்களையும் மிஸஸ் சிவம் அவர்களையும் நினைத்துக்கொண்டேன் சிவராத்திரி அன்னிக்கு.

Subhashini said...

ப்ரணாம் திவா அண்ணா.... பிரசாதம் கிடைச்சுது பெரிய விஷயம் இல்லியா.... எனக்கும் ஏழு எட்டு கோயில் பிரசாதம் கிடைச்சுது. நண்பர் எப்பவும் மகா சிவராத்திரி முழுக்க கண் முழிச்சு திருவாலங்காடு, திரு முல்லை வாயில்..... இப்படி நிறைய கோயில்களுக்கு போவார்..... அவர் புண்ணியத்துலே கிடைச்சுது

ஸ்ரீராம். said...

பசித்திருந்த கூரத்தாழ்வானுக்கு மகாவிஷ்ணு பிரசாதம் கிடைத்தது போல பக்தர்களுக்கு தெய்வம் நேரில் வந்து விடுகிறது. தந்து விடுகிறது. பிறந்த நாள் வாழ்த்துகள்.

திவாண்ணா said...

ஸ்ரீராம், நன்றி, என்னதான் இப்படி அப்பப்ப நடந்தாலும் அப்படி நடக்கும் போது அப்பா ன்னு உருகறா மாதிரி இருக்கு!
சுபாஷிணி, ஆமாம், இப்படி எதிர்பாராம கிடைச்சது பெரிய விஷயமே! புண்ணியம் பண்ணி இருக்கீங்க, ஒவ்வொரு முறையும் 7-8 கோவில் பிரசாதம் கிடைக்க...
டாக்டர், வின்டர் காஃப் கோல்ட் தான்; ஆனா சுகர் அவுட் ஆஃப் கண்ட்ரோல்...
தனபாலன், நன்றி!
கீதாக்கா, நன்னி. ஸ்வீட்... ம்ம்ம்ம் நடத்துங்க! :-))

Kavinaya said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் திவாஜி! வணங்கிக் கொள்கிறேன். சிவராத்திரிக்கு நடராஜர் தரிசனம், பிரசாதம். சூப்பர்!

Kavinaya said...

உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்.

Agila said...

பிறந்த நாள் வாழ்த்துகள்

திவாண்ணா said...

அகிலாஜி, நன்றி!
கவிநயா, ஆசீர்வாதங்கள். நேற்று முதல் சிகித்ஸை ஆரம்பித்துவிட்டேன்.

Raj M said...

அவ்வபொழுது பதிவுகள் படிப்பேன். சிகாகோவை பார்த்ததும் ஒரு கமெண்ட் போடத் தோன்றியது. யாரது பாலா சார்ஆ? அவர்தான் கேலாக் மற்றும் சிதம்பரதுக்காரர்.

இங்கு ஆரோராவிலும், லேமான்டிலும் 4 கால அபிஷேகம் ஏகாதச ருத்ரம் எல்லாம் சிறப்பாக நடந்தது ( சனி கிழமை) . லேக் கவுன்டி கோவில்லில் (ஞாயிறு அன்று) மறு நாள் நடந்தது.

சட்டை ஜீரணம் ஆகும்வரை ஓட்டை விழாமல் பார்த்துகோங்கோ.

பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்னும் பதிவுகள் பல லட்சங்கள் போட இறைவன் அருள் பாலிக்கட்டும்.

Raj M said...
This comment has been removed by a blog administrator.
திவாண்ணா said...

நல்வரவு ராஜ்! இல்லை இவர் பெயர் ஸ்ரீதரன்.

சட்டை ஜீரணம் ஆகும்வரை ஓட்டை விழாமல் பார்த்துகோங்கோ.
:-))))))

//பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்னும் பதிவுகள் பல லட்சங்கள் போட இறைவன் அருள் பாலிக்கட்டும்.//
நன்றி!

திவாண்ணா said...

ராஜ், கமென்ட் டூப்ளிகேட் ஆகியிருந்தது. டெலீட் பண்ணிட்டேன்.

Raj M said...

ஸ்ரீதரன் அவர்களையும் தெரியும். சிறந்த சிவ பக்தர். ஆமாம் அவர் இந்தியா சென்று திரும்பியதாக கேள்வி பட்டேன். மறு பதிவை நீக்கியதற்கு நன்றி!

திவாண்ணா said...

ராஜ், சமுதாயம் எங்கே போகிறதுன்னு அப்பப்ப அக்ஞானத்துடன் கவலை பட்டுக்கொண்டு இருக்கும் போது இப்படி ஸ்ரீதரன் போல சிலரை சந்திப்பது ஒரு நம்பிக்கையை கொடுக்கிறது.
உங்கள் கமென்டை படிக்கும் போது நீங்களூம் ஒரு ப்லாசபர் ன்னு தெரிகிறது. ஏன் ப்ரொபைல் ல ஒண்ணும் விவரம் இல்லை? ஆட்சேபம் இல்லைன்னா mail பண்ணுங்க. :-))

Ramkumar said...

சிவ ராத்திரி அன்னிக்கு திருச்சியை சுற்றியுள்ள (கிராமங்களில் உள்ள) 4 சிவாலங்களுக்கு நானும் அகிலாவும் சென்று தரிசிக்கும் பேறு பெற்றோம். அதில் ஏகிரி மங்கலம் சிவாலயம் மிக சிறப்பு வாய்ந்தது. ஆலயத்தை சுற்றிலும் ஒவ்வொரு திசையைலும் நந்தி உள்ளது. அந்த கோயிலின் பாலாலயம் வரும் ஏப்ரல் மாதம் 7 தேதி (ஞாயிறு) அன்று நடை பெற உள்ளது.அருணகிரி நாதர் வயலூரூக்குச் செல்வதற்கு முன் ஏகிரி மங்கலம் வந்து சிவனை வழிபட்டு பாடியுள்ளார். பாடல் பெற்ற ஸ்தலம்.

Ramkumar said...

சிவ ராத்திரி அன்று திருச்சியை சுற்றியுள்ள நான்கு சிவாலயங்களுக்கு சென்று தரிசிக்கும் பாக்கியம் எனக்கும் அகிலாவுக்கும் கிடைத்தது. ஏகிரி மங்கலம் சிவாலயம் மிக அற்புதம். ஆலயத்தின் அனைத்து திசைகளிலும் நந்தி உள்ளது. அருணகிரி நாதர் வயலூர் முருகப் பெருமானை தரிசனம் செய்வதற்கு முன் ஏகிரி மங்கலம் வந்து சிவ பெருமானை வழிபட்டு பாடல் பாடியுள்ளார். வருகிற ஏப்ரல் மாதம் 7ம் தேதி இவ்வாலயத்தின் பாலாலயம் நடைபெற உள்ளது.

Geetha Sambasivam said...

@ராம்குமார்,

ஏகிரி மங்கலம் வயலூர் செல்லும் வழியில் இருக்கா? விபரங்கள் கொடுங்க

Raj M said...

I think I sent a mail may be a week ago. I think it went to Aanmikam@gmail id. Let me know if I sent it to the incorrect one.

Regards

திவாண்ணா said...

raj, i dont see any mail from you. pl send to drtvasudevan@gmail.com