துக்கம்
என் வருகிறது? இந்த
சரீரம் இருப்பதால் வருகிறது.
அதாவது இந்த
சரீரம் இருக்கும் வரை துக்கம்
வந்து கொண்டுதான் இருக்கும்.
சரீரம் ஏன
வந்தது? தீர்க்க
வேண்டிய கர்மாக்கள் இருப்பதால்
சரீரம் வந்தது. தீர்க்க
வேண்டிய கர்மாக்கள் ஏன் வந்தன?
ராக த்வேஷங்களால்
வந்தன.
மனம்
என்று பொதுவாக நாம் சொன்னாலும்
அது மனம், புத்தி,
சித்தம்,
அகங்காரம்
என்று அந்தக்கரணத்தின் நான்கு
வெளிப்பாடுகள்.
ராக
த்வேஷங்கள் இதன் வளர்ச்சிதான்.
அது 16
வகைப்படும்.
ராகம்
என்பது ஸ்த்ரீ விஷயமாக விஷய
சுகத்தில் உண்டாகும் எண்ணம்.
த்வேஷம்
தனக்கு கெடுதல் செய்த ஒருவனுக்கு
மறு கெடுதல் செய்யும் எண்ணம்.
அதாவது
பழிக்குப்பழி என்கிறோமே அது.
வீடு,
வயல் போன்ற
சொத்துக்களை விரும்பி
சம்பாதிக்கும் எண்ணம் காமம்.
மேல்
சொன்னதை அடைய தடை செய்பவரிடம்
உண்டாவது கோபம் என்னும்
வெறுப்புணர்ச்சி.
தான்
சம்பாதித்ததில் கொஞ்சம் கூட
யாருக்கும் கொடுக்கக்கூடாது
என்னும் 'நல்ல'
எண்ணம் லோபம்.
தனக்கு
சொத்து இருக்கிறது என்ற
கர்வத்தில் எதை செய்யலாம்
எதை செய்யக்கூடாது என்று
பகுத்தறிவே கெட்டுப்போவது
மோஹம்.
எனக்கு
சொத்து இருக்கிறது எதுதான்
என்னால் செய்ய முடியாது என்ற
எண்ணம் மதம்.
யாரேனும்
தனக்கு சமமாக சொத்து வைத்திருந்தால்
அதை சகிக்க முடியாமல் இருப்பது
மாத்ஸர்யம்.
ஏதேனும்
கஷ்டம் வந்தால் இந்த கஷ்டம்
அவனுக்கு வராமல் எனக்கு
வருவானேன் என்கிற எண்ணம்
ஈர்ஷ்யை.
ஏதேனும்
சுகம் வந்தால் இது எனக்கு
மட்டும் வராமல் அவனுக்கும்
வந்திருக்கிறதே என்கிற எண்ணம்
அசூயை.
இந்த
தர்மம் செய்வதால் எனக்கு
புகழ் கிடைக்கும் என்று
நினைப்பது டம்பம்.
எனக்கு
சமம் உலகிலேயே யாருமில்லை
என நினைப்பது தர்ப்பம்.
எல்லாவற்றிலும்
பிடிவாதம் என்பது அஹங்காரம்.
இது
வரை பார்த்தவை முனைந்து
குறைக்க / விட
வேண்டியவை.
அடுத்து
யாரும் செய்தே ஆக வேண்டிய
சில விஷயங்கள். உண்பது,
மல ஜலம்
கழிப்பது முதலானவை இச்சை.
குரு,
நல்லவர்கள்,
தேவதைகளிடம்
அதிக ப்ரீதி வைப்பது பக்தி.
வேதாந்த
வாக்கியத்திலும், யாகம்
முதலான காரியங்களிலும்,
குருவின்
உபதேசத்திலும் நம்பிக்கை
கொள்வது சிரத்தை.
இவற்றை
எல்லாம் ஏன் விசாரிக்க வேண்டும்?
3 comments:
இவற்றையெல்லாம் விசாரித்தால் தான் நம்மை நாமே புரிந்து கொள்ள இயலலாம்.
இன்னம்பூரான்
நல்ல விளக்கங்கள்.
நன்றி தனபாலன், ஸ்ரீராம்!
இ சார், அதே அதே!
Post a Comment