நம்ம
எல்லாருக்கும் - ம்ம்ம்
அனேகமா எல்லாருக்கும் -
அடுத்த பிறவி
இருக்கும். அது
எப்படி அமையும்?
நாம்
செய்கிற பாப புண்ணியங்களுக்கு
தக்கப்படி அமையும்.
புண்ணியம்
மட்டுமே செய்கிறவங்க தேவர்களா
பிறவி எடுப்பாங்க. இப்ப
சூரியன் என்கிற தேவனை நாம்
பார்க்கிறோம் வழி படுகிறோம்ன்னா
அதுக்கு அவர் இதுக்கு முந்தைய
பிறவியில நிறைய புண்ணியம்,
தபஸ் எல்லாம்
செய்ததே காரணம். அதனால
இவருக்கு மத்தவங்க வழிபாடும்,
அவர்களுடைய
வேண்டுகோள்களை நிறைவேற்றி
வைக்க சக்தியும் இருக்கு.
இதுலேயும்
ஒரு க்ரடேஷன் இருக்கு.
ரொம்ப ரொம்ப
புண்ணியம் செய்தவங்க தேவர்களிலேயே
தலைவனான ஹிரண்ய கர்ப்பனாக
பிறவி பெறுவாங்க. நிறைய
புண்ணியம் செய்தவங்க இந்திரன்
முதலான பிறவி பெறுவாங்க.
கொஞ்சமா
புண்ணியம் செய்தவங்களுக்கு
கந்தர்வர்கள், யக்ஷர்கள்
போன்ற பிறவி பெறுவாங்க.
பாபம்
செய்தவங்க?
மத்தவங்களுக்கு
துன்பம் தர ஜன்மாவா எடுப்பாங்க.
அதுதானே
வாசனை?
தாவரங்கள்,
புழு,
பூச்சி போன்ற
ப்ராணி ஜன்மம் கிடைக்கும்.
நிறைய
பாபம் செய்தவங்க எடுக்கிற
பிறவி மத்தவங்க அடிக்கிற
உதைக்கிற ஜன்மமா இருக்கும்.
கொசுவை
அடிச்சு நசுக்கி கொல்லாதவங்க
சிலரே இருப்பாங்க. பூரானை
பார்த்தாலும் பலரும் அடிச்சுட்டே
அடுத்த காரியம் பார்ப்பாங்க.
இதே போல
அட்டை, பாம்பு,
தேள்,
ஆந்தை ன்னு
பலதும். விஷ
முள் செடி, முள்
மரம் ன்னு இருக்கும்.
அதை எல்லாம்
பார்த்தாலும் ஜனங்க அவற்றை
வெட்டியோ எரிச்சோ அகற்றுவாங்க.
மத்திய
அளவில் பாபம் செய்தவங்க தாவர
வகையில் மா, பலா,
வாழை,
தென்னைன்னும்;
ப்ராணிகள்
வகையில் க்ராம பசுக்களான
எருமை, நாய்,
பன்றி,
கழுதை,
ஒட்டகம் போல
பிறவி பெறுவாங்க.
இதுக்கெல்லாம்
கூப்டு சோறும் போடுவாங்க,
கல்லாலேயும்
அடிப்பாங்க, இல்லையா?
கொஞ்சமே
பாபம் செய்தவங்க பசு மாடு,
குதிரை,
அரச மரம்,
துளசி,
வில்வ மரம்
போல மதிப்பு பெறுகிற தாவர,
மிருக ஜன்மங்கள்
பெறுவாங்க.
அது
சரி, எல்லா
காரியமுமே பாபம் அல்லது
புண்ணியம்ன்னு இருக்குமா
என்ன?
அப்படி
இருக்காதுதான். பல
காரியங்களில பாபம் புண்ணியம்
கலந்தே இருக்கும். ஒரு
சாராருக்கு சுகமும் இன்னொரு
சாராருக்கு கஷ்டமும் கொடுக்கிறதா
பல காரியங்கள் இருக்கும்.
அதே போல
புண்ணியம் மட்டுமே செய்கிறவங்களோ,
பாபம் மட்டுமே
செய்கிறவங்களோ கிடையாது.
எல்லாம்
பாபம் / புண்ணியம்
ரெண்டுமே கொஞ்சமோ /
நிறையவோதான்
செய்து கொண்டு இருக்கிறோம்.
இப்படி
கலப்படியான கர்மாக்கள்
செய்கிறவங்களுக்கு மனித
ஜன்மம் கிடைக்கும்.
இதுலேயே
புண்ணியம் அதிகமாக செய்தவங்களுக்கு
ஆத்ம சிந்தனை, வேதாந்த
சிரவணம், நிஷ்காம்ய
கர்மானுஷ்டானம், சத்குருவை
அடைதல் போன்ற ஆத்ம அபிவிருத்தி
செய்து கொள்ளக்கூடிய பிறவி
கிடைக்கும்.
மத்திய
அளவு கலந்த கர்மா செய்தவர்களுக்கு
தன் சொந்த தர்மத்தை அனுசரிக்கவும்,
காம்ய
கர்மாக்களை செய்தல் போன்ற
மத்திய தர வாழ்க்கைக்கு
அனுகூலமான பிறவி கிடைக்கும்.
நிறைய
பாபம் கொஞ்சமே கொஞ்சம் புண்ணியம்
செய்திருந்தால் சமுதாயம்
புறக்கணிக்கிற வேடுவன்,
திருடன்,
கொலைகாரன்,
சமூக விரோதி
போன்ற ஜன்மாவாக கிடைக்கும்.
இது
சமீபத்தில் லகு வாசுதேவ
மனனத்தில் படித்து, பின்
யோசித்தது.
8 comments:
இதில் கிரேடெல்லாம் வேறு உண்டா? பாலில் ஒருதுளி விஷம் விஷம்தான் கணக்கு இங்கே இல்லையோ?
க்ரேட் இருக்கப்போலவே இருக்கே. வாசுதேவ மனனம் ரமணர் குறித்த புத்தகம் படித்த போது அவரால் சிலாகித்து சொல்லப்பட்டு இருக்கு. அதுல ஸ்பஷ்டமாகவே சொல்லி இருக்கு.
அடுத்த பிறவியில் என்னவாய்ப் பிறப்பேனோ, தெரியலை. :))))
பிறவா வரம் வேண்டும்.
இந்தப் பிறவியே போதும் சாமீ...!
அடுத்த பிறவியில் என்னவாய்ப் பிறப்பேனோ, ///
கீ அக்கா, அதப்பத்தி அப்ப கூட இருக்கப் போறவங்கதான் கவலைப்படணும். நீங்க ஏன் கவலைப்படறீங்க? :P:P:P:P
தனபாலன், திருப்பி இதே மனிதப்பிறவி கேக்கறீங்களா இல்லை பிறவி போதும் என்கிறீங்களா? :-)
//கீ அக்கா, அதப்பத்தி அப்ப கூட இருக்கப் போறவங்கதான் கவலைப்படணும். நீங்க ஏன் கவலைப்படறீங்க? :P:P:P:P//
வா.தி. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இன்னிக்கு ஃபுல் ஃபார்மிலே இருக்கீங்க போல ! :))))
Post a Comment