தீபத்தை பூஜை அறையில் கொண்டு வைக்கலாம். பெரிய விளக்குடன் சேர்க்கவும் செய்யலாம்.
பின் ஹோமம். இரண்டே ஹோமம். சோமாய பித்ருமதே, அக்னி கவ்யவாஹனாய.
ஏஷதே தத என்று அன்னத்தை தொட்டுக்கொண்டு சொல்வது கிடையாது.
போஜன பாத்திரத்தில் அன்னம் வைத்தபின் ஸ்வதேயம் என்று ஹோம சேஷம் வைக்க வேண்டும். ‘அன்னம் அன்னேன’ என்று சூத்திரம் இருப்பதால். உபவீதியாகவே அன்னம் வைக்க வேண்டும். ப்ராசீனாவீதியாக அன்னம் வைத்தால் அதை சாப்பிடக்கூடாது என்று இருக்கிறது. (ஏகோதிஷ்டத்துக்கு சமானமாகிவிடும் என்று)
பித்ருவுக்காக உத்தேசித்ததை மற்ற அன்னத்துடன் சம்பந்தப்படுத்தக்கூடாது என்கிறார்கள். முன் காலத்தில் பித்ருக்கள் விஶ்வேதேவர்களுக்கு தனித்தனியாக அன்னம் வடிப்பதாக சொல்கிறார்கள். விகிரான்னம் அவரவரது அன்னத்திலிருந்து. பித்ருவுக்கு வைத்த அன்னத்தின் மீதி கர்த்தாவுக்கும் பத்னிக்கும் மட்டும் கொடுக்கலாம். மற்றபடி எல்லாம் யாஜுஷத்துக்கு சமானம்.
திருப்தி கேட்கும் முன் பிண்டப் பிரதானம். (ஸாம வேதிகளுக்கும் அப்படியே). பின் விகிரான்னம். (ரிக்வேதிகளுக்கு) வாயஸ பிண்டம் என்று மற்றவை யஜுர்வேதிகள் போல.
பாணி
ஹோமம்:
இத்மம்
ஹோமம் தவிர எல்லாம் உண்டு.
அதாவது
பாத்திர சாதனம் உண்டு.
பிண்ட
பித்ரு யக்ஞம் போலவே.
தர்ப்பம்
எல்லாம் ஆக்னே ஆக்ரம். (நுனிகள் தென்கிழக்கு திசையை பார்த்து)
யஜுர் வேதிகளுக்கு ஸ்வதேயம் வைக்கும் முன் ஹோமம். ஆனால் இங்கே ரிக் வேதிகளுக்கு ஹோமம் இல்லை. ஆகவே அந்த நேரத்தில் அந்த இடத்தில் மேக்ஷண கரண்டியை வைத்துக்கொண்டு ஹோமத்திற்கான இரண்டு மந்திரங்கள் சொல்லி பித்ரு போக்தா கையில் அன்னத்தை வைத்துவிட வேண்டியது. அவர் அதை இலையில் வைத்துக்கொண்டு மற்றதுடன் உண்டு விடுவார். மீதியிலிருந்து ஸ்வதேயம் என்று இலையில் வைப்பது, பிண்டப்ரதானம் ஆகியவை. மற்றபடி ப்ரம்ஹ யக்ஞம், போஜனம் போன்ற எல்லாம் பொதுவானவை.
No comments:
Post a Comment