ஷண்ணவதி ஶ்ராத்தங்கள்:
96 நாட்கள் ஶ்ராத்தத்துக்கு உகந்தவை என்கிறார்கள்.
இது சாஸ்திரத்தில் சொன்ன கணக்கு அல்ல. 96 என்பதும் வருடா வருடம் கூடும் குறையும்.
வருட பிறப்பு -1
அயன பிறப்பு (தக்ஷிணாயனம், உத்தராயணம்) -2
ஸௌர மாத பிறப்பு -12
அமாவாசை -12
மன்வாதி 14
யுகாதிகள் 4
பூர்வேத்யு, அன்வஷ்டகா, அஷ்டகா. 12
( இதெல்லாம் ஹேமந்த சிசிர ருதுக்கள்ல வருகிற க்ருஷ்ணபக்ஷ அஷ்டமிகள், அதன் முன் திதி, பின் திதி. )
மஹாலய பக்ஷம் 15
வ்யதீபாதம் 12
வைத்ருதி 12
வ்யதீபாதம் என்பது என்ன? அமாவாசையுடன் ஸ்ரவணம், அஶ்வினீ, அவிட்டம், திருவாதிரை, ஆயில்யம், ம்ருகசீர்ஷம் ஆகிய நக்ஷத்திரங்களோ அல்லது ஞாயிற்றுக்கிழமையோ சேர்ந்தால் அது வ்யதீபாதமாகும்.
அஷ்டகா ஶ்ராத்தத்தில் மாதாமஹ வர்க்கம் கிடையாது.
இவற்றில் இரண்டு ஒரே நாளில் வரும் வாய்ப்புகள் அதிகம். 360 நாட்களில் 96 என்றால் தோராயமாக 4 நாட்களுக்கு ஒரு முறை….
இவை அனைத்தையும் ஶ்ராத்தமாக செய்வோர் இக்காலத்தில் யாருமில்லை. அப்படி இருந்தால் சொல்லுங்கள் அந்த மஹானை அவசியம் தரிசித்து நமஸ்காரம் செய்ய வேண்டும்.
96 ஐயும் தர்ப்பணமாக செய்கிறேன் என்கிறார்கள் சிலர். எள்ளும் நீரும் இறைத்தால் அதற்கு பலன் நிச்சயம் உண்டு என்பதைத்தவிர ஒன்றும் சொல்வதற்கில்லை. இப்படி செய்ய சாஸ்திரத்தில் சொல்லவில்லை.
ஆனால் இவற்றை ஹிரண்ய ரூபமாக செய்ய வாய்ப்புண்டு.
அதற்கு: ப்ராம்ஹணர் கிடைக்காவிட்டால் கூர்ச்சம் போட்டு விஶ்வேதேவர், பித்ருக்கள், விஷ்ணு காருண்ய பித்ரு உண்டு என்றால் அவர்கள் என வரித்து இயன்ற படியோ குறைந்தது அக்ஷதை எள்ளாலோ ஆராதனை செய்து ஹிரண்யம் தத்தம் செய்து; ஶ்ராத்த அங்கமாக தில தர்ப்பணம் செய்ய வேண்டியது. காருண்ய பித்ருக்கள் அந்த ஶ்ராத்தத்தில் உண்டென்றால் அவர்களுக்கும் ஆவாஹணம் தர்ப்பணம் உண்டு.
ஹிரண்யமாக செய்யப்புகுந்தால் ஒரே நாளில் இரண்டு வந்தால் என்ன செய்வது என்றால்…
அதைப்பற்றி பஞ்சாயத்து நடக்கிறது. ஒரு பக்கம் ஒரே நாளில் இரண்டு ஶ்ராத்தம் கிடையாது என்கிறார்கள். இன்னொரு பக்கம் எல்லாமே செய்ய வேண்டும் என்கிறார்கள். அப்படியானால் எதை முன்னால் செய்வது என்றால் தர்ச ஶ்ராத்தமே.
No comments:
Post a Comment