ஸாம வேதிகள்: 2 தந்திரங்கள்.
பரிசேஷன தந்திரம்: ஔபாசனம் போல பரிசேஷனம் செய்து ப்ரதான ஆஹுதி ஹோமம். பெரும்பாலும் - 99% போல- இதுவே நடைமுறையில் உள்ளது.
ஆஜ்ய/ இத்ம தந்திரம் என்பது யாவத்தாக அக்னி முகத்தில் ஆரம்பித்து செய்வது.
ஔபாசனம் நித்யபடி செய்து கொண்டிருந்தாலும் பரிசேஷன தந்திரமே.
பொதுவாக சங்கல்பம், வரணம், ஹோமம், போஜனம், பிண்ட ப்ரதானம், ப்ராஹ்மண உத்வாஸனம். ரிக்வேதிகள் போலவே ஏறத்தாழ.
அஷ்டகா ஶ்ராத்தத்தில் மட்டுமே இத்ம தந்திரத்தில் செய்யச்சொல்லி இருக்கிறது. அதில் ஹோமம் ஆனதும் பிண்ட ப்ரதானம். அதற்கு பின்னரே ப்ராம்ஹண வரணம் முதலானவை. (பாரத்வாஜ ஸூத்திரம்). மற்ற ஸுத்திரங்களில் சங்கல்பம், வரணம், ஹோமம், பிண்ட ப்ரதானம்.
எப்படியும் போஜனம் முடிந்த பிறகே பிண்டங்களை உத்வாசனம் செய்ய வேண்டும். (ஆவாஹனம் ஆகிய தேவதைகளை வழி அனுப்புதல்)
பித்ருக்கள் இப்போது எந்த ரூபத்தில் இருக்கிறார்கள் என்று தெரியாததால் ஐந்து விதமாக திருப்தி செய்கிறோம். தேவ ரூபமாக இருந்தால் அக்னி, மனுஷ ரூபம் - போஜனம், தர்ப்பணம் பிண்ட ப்ரதானம், வாயஸ பிண்டம் ஆகியவையும் இப்படியே மற்ற ரூபங்களுக்கு.
சிலருக்கு ஹோமம் இருக்கிறது, சிலருக்கு இல்லை. சங்கல்ப ஶ்ராத்தம் என்று ஒன்று. வெறும் ப்ராஹ்மண போஜனத்தால் த்ருப்தி அடைவர். இப்படி நிறைய பேதங்கள் உள்ளன.
அஷ்டகா ஶ்ராத்தத்தில் போஜனத்துக்கு முன் பிண்ட ப்ரதானம். இது குறித்து நிறைய விசாரங்கள் நடக்கின்றன. நிறைய ஊஹம் செய்ய வேண்டி இருக்கிறது.
No comments:
Post a Comment