ஸங்கல்ப விதான ஶ்ராத்தம்:
வியாஸரின் வசனப்படி அக்னியை விட்டுவிட்டவர்களுக்கு பார்வணம் என்பது இல்லை. இவர்களுக்கு சங்கல்ப ஶ்ராத்தம் செய்யச்சொல்லுகிறார். அக்னியை விடாதவன் விஷயத்திலேயே அசக்தி என்றால் சங்கல்ப ஶ்ராத்தம். அதில்
ஆம ஶ்ராத்தம். பக்வமான வஸ்துக்களை சம்பாதிக்க முடியவில்லையானால் பத்னி இல்லாதவன், யாத்ரிகன், ரஜஸ்வலா பதி (அன்றைக்கு பத்னி வீட்டுவிலக்காக இருந்தால்) ஆம ஶ்ராத்தத்தை அந்தணர் செய்யலாம். அந்தணர் அல்லாதோருக்கு எப்போதுமே ஆம ஶ்ராத்தத்தில் அதிகாரம் உள்ளது. மாஸிகம், ப்ரத்யாப்திகம் ஆகியவற்றை ஆமமாக செய்யலாகாது. அக்னியை விட்டவனாக உள்ள வரை ஆமமாக செய்க. ஹோமத்தை வரிக்கப்பட்ட ப்ராஹ்மணன் கையில் செய்ய வேண்டும். ப்ராம்ஹணர்களுக்கு எதை கொடுக்க முடிகிறதோ அந்த அன்னத்தையே/ பக்குவம் செய்யப்படாததையே பிண்டமாக கொடுக்க வேண்டும். மற்றவை பார்வணம் போலவே.
ஹிரண்ய ஶ்ராத்தம்: ஆமமாக முடியாவிடில் இதை செய்க.
ஆமத்துக்கான காரணங்கள் இங்கேயும் பொருந்தும். கூடுதலாக ப்ராம்ஹணர் கிடைக்காவிட்டாலும் புத்ர ஜனனத்திலும் இப்படி செய்யலாம். கூடிய மட்டில் மற்ற விசேஷங்களையும் அனுஷ்டிக்க வேன்டும்.
இதெல்லாமும் முடியாத பக்ஷத்தில் பசுவுக்கு புல்லையாவது கொடு. ஸ்நாநம் செய்து எள் ஜலத்தால் தர்ப்பணமாவது செய். நெருப்பினால் காய்ந்த புதரை எரிக்கவாவது செய். உபவாஸம் இருந்து ஶ்ராத்த மந்திரங்களையாவது ஜபி. ஏன் முடியவில்லை என்பதை பொருத்து ஶ்ராத்தம் செய்த பலன் கிடைக்கும்.
No comments:
Post a Comment