Pages

Friday, April 8, 2022

ஶ்ராத்தம் - 47 தர்ஶ ஶ்ராத்தம்




 

தர்ச ஶ்ராத்தம் நித்ய கர்மா. செய்யாமல் இருக்கக்கூடாது. எள்-நீர் தர்ப்பணத்தை முதலில் செய்து பின் ஶ்ராத்தம் செய்ய வேண்டும். (மஹாளயத்தில் பின்பு; ப்ரத்யாப்திகம் எனப்படும் வருடந்திர ஶ்ராத்தத்தில் அடுத்த நாள் - பரேஹணிபார்வணமாக ஶ்ராத்தம் செய்ய முடியாவிட்டால் ஹிரண்யமாகவாவது செய்ய வேண்டும். அதற்கு பிராம்ஹணர்களை வரித்து உபசாரங்கள் செய்து உணவிட்டு தக்ஷிணை கொடுக்க வேண்டும். ப்ராம்ஹணர்கள் கிடைக்காவிட்டால் கூர்ச்சம் போட்டு ஆவாஹனம் செய்து உபசரித்து உத்தேசித்த உணவை பசு மாட்டுக்கு கொடுத்துவிட்டு/ மண்ணில் புதைத்து விட்டு ஹிரண்யத்தை தத்தம் செய்து வைத்து பின்னால் கொடுத்துக்கொள்ளலாம். நடைமுறையில் உபசரித்து ஹிரண்யம் மட்டும் கொடுப்பது என்று சிலர் செய்கிறார்கள். ஆனால் பித்ருக்களை உத்தேசித்து எள்ளும் நீரும் இறைத்தால் பலன் உண்டு என்ற ரீதியில் தர்ப்பணம் மட்டுமே நடைமுறையில் இருக்கிறது. இதற்கும் மெனக்கெடாமல் விட்டுவிட்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.

இதை செய்யாவிடில் 14 ஜென்மங்களுக்கு பாபி ஆகி மிகவும் தாழ்வான நிலையில் பிறப்பான் என்று சொல்லியிருக்கிறது. அதனால் அவசியம் செய்ய வேண்டும். ஒருவேளை முன்னோர்களில் யாரும் சன்னியாசி ஆகி ஜீவன்முக்தி நிலையை அடைந்து மோக்ஷத்தையே அடைந்திருந்தாலும் அவர்களுடைய சந்ததிகள் ‘பிரம்மீ பூத’ என்று முன்னே சொல்லி அவருடைய க்ருஹஸ்த ஆஸ்ரம பெயரை சொல்லி தர்ப்பணங்கள் செய்ய வேண்டும் என்பது தர்ம சாஸ்திரம். அவ்வாறு செய்யாவிடில் பாபம் உண்டு.

மோட்சத்தை அடையாமல் புண்ணிய பாவங்களுக்கு தகுந்தபடி பிறவி எடுத்து இருக்கும் முன்னோர்களுக்கு அவர்கள் இருக்கும் நிலைக்கு தகுந்தபடி இந்த அன்னமோ எள்ளும் ஜலமுமோ ஆகாரமாக ஆகிறது

இந்த ஶ்ராத்தம் பித்ருக்களையும் மாதாமஹர்களையும் உத்தேசித்து செய்யப்படுவது. இரு வர்க்கத்துக்கும் பேதமில்லாமல் செய்ய வேண்டும். (சிலர் மாதாமஹர்களை விட்டுவிடுகிறார்கள். அல்லது மந்திரம் சொல்லாமல் செய்கிறார்கள். இது தவறு)

பார்வணத்தில் முதலில் தர்ப்பணம், பின் ஶ்ராத்தமானாலும் ஹிரண்ய ரூபத்தில் முதலில் ஶ்ராத்தம், பின் தர்ப்பணம்.

தர்ஶ ஶ்ராத்தம் ஹிரண்ய ரூபேன கரிஷ்யே என்று ஸங்கல்பம்

வி.தேவர், வர்கத்வய பித்ரூன், விஷ்ணு என்று மூன்று கூர்ச்சங்களை வைத்து ஶ்ராத்தத்தில் எப்படி (தகுந்தபடி அக்‌ஷதை/ எள் கொண்டுஉபசாரங்கள் செய்வோமோ அப்படி செய்து (அல்லது ஸகலாராதனை ஸ்வர்ச்சிதம் என்று சொல்லி) அஸ்மின் ஹிரண்ய ஶ்ராத்தே கிஞ்சித் ஹிரண்யம் ச தக்‌ஷிணாகம் ச தாம்பூலம் … (வி,தே, வர்கத்வய பித்ரே விஷ்ணவே) இதன் நமம என்று சொல்லி சமர்ப்பணம். இவ்வளவு தக்‌ஷிணை என்றூ எங்கும் சொல்லப்படவில்லையாதலால் இயன்ற படி செய்யலாம். ஏற்கெனெவே வாத்தியாருக்கு கொடுத்துக்கொண்டு இருந்ததையே பகுதி பகுதியாக வைத்துவிடலாம்.

பின் உத்வாஸனம். ஆவாஹனம் செய்தவர்களை வழி அனுப்புவது

பின் ஶ்ராத்தாங்க தர்ப்பணம் கரிஷ்யே என்று ஸங்கல்பித்து  மந்திரம் சொல்லி தர்ப்பணம் செய்ய வேண்டும். மீதி இது அனேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இந்த தர்ப்பணத்தில் தெற்கு நுனியாக கூர்ச்சம்/ தர்ப்பக்கட்டு (ஒற்றைப்படையாக 7 முதல் 15) போட்டு வர்க த்வய பித்ருக்களை ஆவாஹனம் செய்து ஆசனம் அளித்து ஆராதனை செய்து பின் தர்ப்பணம்.

எள்ளை எடுக்கும் போது ஆள்காட்டி விரலும் கட்டை விரலும் சேர்த்து எடுக்கக்கூடாது. அது அசுர முத்திரை. தேவ காரியங்களிலும் அகங்காரத்தின் அடையாளம் என்று சொல்லி ஆள்காட்டி விரலை தவிர்ப்பர்

சுலபமாக நீர் பாத்திரத்தில் எள் சேர்த்து அதை உத்தரணியால் எடுத்து தர்ப்பிக்கலாம். அப்படி செய்தால் ஆசமனாதிகளுக்கு அதை கொட்டிவிட்டு சுத்தம் செய்து வேறு ஜலம் எடுக்க வேண்டும். அல்லது வலது கையின் ஈரமான மோதிர விரலால் (அல்லது கட்டை விரலால்) எள்ளை தொட்டுக்கொண்டு உள்ளங்கையில் ஜலம் எடுத்து அதில் விரலை விட எள் சேர்ந்துவிடும்

செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் ஜன்ம நக்‌ஷத்திரத்தில் செய்யும் தர்ப்பணத்தில் அரிசி சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று சிலர் சொல்லுகிறார்கள். சாஸ்திரம் வாக்கியம் எங்கும் காணவில்லை.

எல்லாம் முடித்து இதன் சாத்குண்யமாக (அதில் ஏற்பட்ட பாபங்களை விலக்க) ஏதேனும் ஒரு ப்ராம்ஹணனுக்கு தக்ஷிணை தர வேண்டும்

பவித்ரம் வாங்கிக்கொள்வது, ஸங்கல்பம், காயே ந வாசா ஆகியவற்றுக்கு அக்ஷதை உண்டு. வழக்கமாக எல்லோரும் செய்வதில் இங்கே கூர்ச்சம் ஆராதனை மட்டுமே அதிகம். பழகாமல் 10 நிமிடம் பழகிவிட்டால் 5 நிமிடம் கூடுதலாக ஆகும். ஆனால் சரியாக செய்ததாகும்.


No comments: