Pages

Friday, October 19, 2018

பறவையின் கீதம் - 51





மடத்தில் குரு பூஜைக்கு உக்காரும்போதெல்லாம் ஒரு பூனை வந்து கவனத்தை கலைத்தது. ஆகவே அதை பிடித்து கட்டி வைக்கும் படி சொன்னார். இது தினசரி கதையாயிற்று.

குரு இறந்து போனார். வேறொருவர் வந்தார். அப்போதும் பூனையை பிடித்து கட்டிபோட்டனர். ஒரு நாள் அந்த பூனை செத்துப்போயிற்று. குருவின் உத்தரவை மதிக்க வேறொரு பூனையை கொண்டு வந்து கட்டிப்போட்டனர். இதே அங்கே பழக்கமாகிப் போனது. 
பல நூற்றாண்டுகள் கழித்து அறிஞர்கள் பூனையை கட்டிப்போடும் ஆன்மீக சடங்கின் மகத்துவம் பற்றி பெரிய பெரிய புத்தகங்களை எழுதினார்கள்!

Thursday, October 18, 2018

பறவையின் கீதம் - 50





துறவி ஒருவர் சைனாவுக்குப்போனார். ஞானம் அடைய பயிற்சி கொடுக்க சில சீடர்களை சேர்த்தார். அவர்கள் தவறாமல் அவருடைய பிரசங்கங்களை கேட்டனர். நாளடைவில் வருவதை நிறுத்திவிட்டனர்.

உங்கள் குருவின் காலடிகளிலேயே எப்போதுமே நீங்கள் இருந்தால் அது உங்களது குருவுக்கு பெருமை அல்ல!

Wednesday, October 17, 2018

பறவையின் கீதம் - 49





ஒரு அம்மாவுக்கு தன் பிள்ளையை சாயங்காலம் இருட்டும் முன் வீட்டுக்கு வர வைப்பதில் பிரச்சினை இருந்தது. அதனால் வழியில் பேய்கள் இருப்பதாகவும் அவை இருட்டிவிட்டல் வெளியே வந்து உலாவும் என்றும் சொல்லி வைத்தார். அதிலிருந்து பிள்ளையும் நேரத்துக்கு வீடு திரும்ப ஆரம்பித்தான்.

ஆனால் பெரியவன் ஆகியும் அந்த பயம் போகவில்லை. இருட்டிவிட்டால் வெளியே போய் செய்யக்கூடிய சிறு வேலைகளை செய்ய மறுத்தான். ஆகவே அவள் ஒரு தாயத்தை கட்டிவிட்டு அது பேய்களில் இருந்து அவனை பாதுகாக்கும் என்று சொன்னாள்.

மோசமான மதம் அவனுக்கு தாயத்தை கொடுத்தது. நல்ல மதம் அவனுக்கு பேய்கள் இல்லை என்று புரியவைத்திருக்கும்.

Tuesday, October 16, 2018

பறவையின் கீதம் - 48





மாஸ்டரின் பிரசங்கம் ஒரே ஒரு புதிரான வாக்கியமாக இருந்தது.

“நான் செய்வதெல்லாம் நதிக்கரையில் உட்கார்ந்து நதி நீரை விற்பதுதான்!”

நான் நீரை வாங்குவதிலேயே குறியாக இருந்தேன்; நதியை கவனிக்கவில்லை.

(நேத்து கொஞ்சம் பெரிசா நெருடலா போச்சு இல்ல? இதோ காம்பன்சேஷன்!)

Monday, October 15, 2018

பறவையின் கீதம் - 47





யதார்த்தத்தில் அவன் ஒரு நாஸ்திகனாக ஆகிவிட்டதாக சொன்னான். அவன் நிஜமாகவே யோசித்தால் அவனது மதம் சொல்லிக்கொடுத்த எதையும் அவன் நம்பமாட்டான். கடவுளின் இருப்பு தீர்க்கும் பிரச்சினைகளை விட அதிக பிரச்சினைகளை உருவாக்குகிறது. இறப்புக்கு பின் வாழ்வு அவனைப்பொருத்த வரை ஒரு நப்பாசை. சாத்திரங்களும் பாரம்பரியமும் நல்லதை விட கெட்டதே அதிகம் செய்திருக்கின்றன. இவை எல்லாம் மனித வாழ்வில் தனிமையையும் கையறு நிலையையும் கொஞ்சம் சமப்படுத்த கண்டுபிடிக்கப்பட்டவை.
இவனை அப்படியே விட்டுவிடுங்கள். இவன் தன்னைத்தானே அறிந்து கொண்டு வளரும் நிலையில் இருக்கிறான்.
(அந்தனி தெமெல்லோ அப்படி ஒரு நிலையில் இருந்து எழுதினார் போலிருக்கிறது!)

சீடன் மாஸ்டரிடம் ஒரு நாள் கேட்டான்.
“புத்தா என்கிறது என்ன?”
"“மனமே புத்தா"
இன்னொரு நாள் அதே கேள்வியை கேட்டான். ஆனால் பதில் வேறாக இருந்தது.
'மனமில்லையானால் புத்தாவை அறிவாய்"
சீடன் குழம்பிவிட்டான். “அன்னைக்கு வேற மாதிரி சொன்னீங்களே?”
அப்ப குழந்தை அழுதுகிட்டு இருந்தது. அத நிறுத்த அப்படி சொன்னேன். அழுகை நின்னப்பறம் இப்படி சொல்லறேன்!”

அவனுள் இருந்த குழந்தை அழுவதை நிறுத்திவிட்டது. உண்மைக்கு அவன் தயாராக இருந்தான். ஆகவே அவனை அப்படியே விட்டுவிடுவது சரியாக இருந்தது.
ஆனால் பிறகு அவன் பேச ஆரம்பித்தபோது அவனை கட்டுப்படுத்த வேண்டி இருந்தது. அவனது புதிய நாத்திகத்தை யாரும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.

“ஒரு காலத்தில் மக்கள் சூரியனை போற்றி வழிபட்டார்கள். அது அறிவியல் வரும் முன்னே. அதன் பின் அறிவியல் சூரியன் கடவுள் ஏன் ஒரு வாழும் உயிரினம் கூட இல்லை என்றது. அதன்பின் ஒரு உள்ளுணர்வு காலம் வந்தது. ப்ரான்சிஸ் ஆஃப் அசிசி சூரியனை தன் சகோதரன் என்று சொல்லி அதனுடன் பக்தி கலந்த அன்புடன் பேசலானார்.”

“உங்கள் நம்பிக்கை பயப்படும் குழந்தை போல இருந்தது. நீங்கள் பயம் நீங்கியவரானதும் அதற்கு தேவையில்லாமல் போனது. நீங்கள் அடுத்து உள்ளுணர்வு மட்டத்துக்கு முன்னேறி உங்கள் நம்பிக்கையை மீண்டும் பெறுவீராக!”

நம்பிக்கை சத்தியத்துக்கான அச்சமற்ற தேடல்.
ஆகவே ஒருவரின் நம்பிக்கைகளை கேள்வி கேட்கும் போது அது மறைவதில்லை.