ஒரு
அம்மாவுக்கு தன் பிள்ளையை
சாயங்காலம் இருட்டும் முன்
வீட்டுக்கு வர வைப்பதில்
பிரச்சினை இருந்தது.
அதனால்
வழியில் பேய்கள் இருப்பதாகவும்
அவை இருட்டிவிட்டல் வெளியே
வந்து உலாவும் என்றும் சொல்லி
வைத்தார். அதிலிருந்து
பிள்ளையும் நேரத்துக்கு வீடு
திரும்ப ஆரம்பித்தான்.
ஆனால்
பெரியவன் ஆகியும் அந்த பயம்
போகவில்லை. இருட்டிவிட்டால்
வெளியே போய் செய்யக்கூடிய
சிறு வேலைகளை செய்ய மறுத்தான்.
ஆகவே அவள்
ஒரு தாயத்தை கட்டிவிட்டு அது
பேய்களில் இருந்து அவனை
பாதுகாக்கும் என்று சொன்னாள்.
மோசமான
மதம் அவனுக்கு தாயத்தை
கொடுத்தது. நல்ல
மதம் அவனுக்கு பேய்கள் இல்லை
என்று புரியவைத்திருக்கும்.
No comments:
Post a Comment