மடத்தில்
குரு பூஜைக்கு உக்காரும்போதெல்லாம்
ஒரு பூனை வந்து கவனத்தை
கலைத்தது. ஆகவே
அதை பிடித்து கட்டி வைக்கும்
படி சொன்னார். இது
தினசரி கதையாயிற்று.
குரு
இறந்து போனார். வேறொருவர்
வந்தார். அப்போதும்
பூனையை பிடித்து கட்டிபோட்டனர்.
ஒரு நாள்
அந்த பூனை செத்துப்போயிற்று.
குருவின்
உத்தரவை மதிக்க வேறொரு பூனையை
கொண்டு வந்து கட்டிப்போட்டனர்.
இதே அங்கே
பழக்கமாகிப் போனது.
பல
நூற்றாண்டுகள் கழித்து
அறிஞர்கள் பூனையை கட்டிப்போடும்
ஆன்மீக சடங்கின் மகத்துவம்
பற்றி பெரிய பெரிய புத்தகங்களை
எழுதினார்கள்!
No comments:
Post a Comment