யதார்த்தத்தில்
அவன் ஒரு நாஸ்திகனாக ஆகிவிட்டதாக
சொன்னான். அவன்
நிஜமாகவே யோசித்தால் அவனது
மதம் சொல்லிக்கொடுத்த எதையும்
அவன் நம்பமாட்டான்.
கடவுளின்
இருப்பு தீர்க்கும் பிரச்சினைகளை
விட அதிக பிரச்சினைகளை
உருவாக்குகிறது. இறப்புக்கு
பின் வாழ்வு அவனைப்பொருத்த
வரை ஒரு நப்பாசை.
சாத்திரங்களும்
பாரம்பரியமும் நல்லதை விட
கெட்டதே அதிகம் செய்திருக்கின்றன.
இவை எல்லாம்
மனித வாழ்வில் தனிமையையும்
கையறு நிலையையும் கொஞ்சம்
சமப்படுத்த கண்டுபிடிக்கப்பட்டவை.
இவனை
அப்படியே விட்டுவிடுங்கள்.
இவன் தன்னைத்தானே
அறிந்து கொண்டு வளரும் நிலையில்
இருக்கிறான்.
(அந்தனி தெமெல்லோ அப்படி ஒரு நிலையில் இருந்து எழுதினார் போலிருக்கிறது!)
(அந்தனி தெமெல்லோ அப்படி ஒரு நிலையில் இருந்து எழுதினார் போலிருக்கிறது!)
சீடன்
மாஸ்டரிடம் ஒரு நாள் கேட்டான்.
“புத்தா
என்கிறது என்ன?”
"“மனமே
புத்தா"
இன்னொரு
நாள் அதே கேள்வியை கேட்டான்.
ஆனால்
பதில் வேறாக இருந்தது.
'மனமில்லையானால்
புத்தாவை அறிவாய்"
சீடன்
குழம்பிவிட்டான்.
“அன்னைக்கு
வேற மாதிரி சொன்னீங்களே?”
அப்ப
குழந்தை அழுதுகிட்டு இருந்தது.
அத நிறுத்த
அப்படி சொன்னேன்.
அழுகை
நின்னப்பறம் இப்படி சொல்லறேன்!”
அவனுள்
இருந்த குழந்தை அழுவதை
நிறுத்திவிட்டது.
உண்மைக்கு
அவன் தயாராக இருந்தான்.
ஆகவே அவனை
அப்படியே விட்டுவிடுவது
சரியாக இருந்தது.
ஆனால்
பிறகு அவன் பேச ஆரம்பித்தபோது
அவனை கட்டுப்படுத்த வேண்டி
இருந்தது. அவனது
புதிய நாத்திகத்தை யாரும்
ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.
“ஒரு
காலத்தில் மக்கள் சூரியனை
போற்றி வழிபட்டார்கள்.
அது அறிவியல்
வரும் முன்னே. அதன்
பின் அறிவியல் சூரியன் கடவுள்
ஏன் ஒரு வாழும் உயிரினம் கூட
இல்லை என்றது. அதன்பின்
ஒரு உள்ளுணர்வு காலம் வந்தது.
ப்ரான்சிஸ்
ஆஃப் அசிசி சூரியனை தன் சகோதரன்
என்று சொல்லி அதனுடன் பக்தி
கலந்த அன்புடன் பேசலானார்.”
“உங்கள்
நம்பிக்கை பயப்படும் குழந்தை
போல இருந்தது. நீங்கள்
பயம் நீங்கியவரானதும் அதற்கு
தேவையில்லாமல் போனது.
நீங்கள்
அடுத்து உள்ளுணர்வு மட்டத்துக்கு
முன்னேறி உங்கள் நம்பிக்கையை
மீண்டும் பெறுவீராக!”
நம்பிக்கை
சத்தியத்துக்கான அச்சமற்ற
தேடல்.
ஆகவே
ஒருவரின் நம்பிக்கைகளை கேள்வி
கேட்கும் போது அது மறைவதில்லை.
No comments:
Post a Comment