Pages

Friday, April 8, 2022

ஶ்ராத்தம் - 47 தர்ஶ ஶ்ராத்தம்




 

தர்ச ஶ்ராத்தம் நித்ய கர்மா. செய்யாமல் இருக்கக்கூடாது. எள்-நீர் தர்ப்பணத்தை முதலில் செய்து பின் ஶ்ராத்தம் செய்ய வேண்டும். (மஹாளயத்தில் பின்பு; ப்ரத்யாப்திகம் எனப்படும் வருடந்திர ஶ்ராத்தத்தில் அடுத்த நாள் - பரேஹணிபார்வணமாக ஶ்ராத்தம் செய்ய முடியாவிட்டால் ஹிரண்யமாகவாவது செய்ய வேண்டும். அதற்கு பிராம்ஹணர்களை வரித்து உபசாரங்கள் செய்து உணவிட்டு தக்ஷிணை கொடுக்க வேண்டும். ப்ராம்ஹணர்கள் கிடைக்காவிட்டால் கூர்ச்சம் போட்டு ஆவாஹனம் செய்து உபசரித்து உத்தேசித்த உணவை பசு மாட்டுக்கு கொடுத்துவிட்டு/ மண்ணில் புதைத்து விட்டு ஹிரண்யத்தை தத்தம் செய்து வைத்து பின்னால் கொடுத்துக்கொள்ளலாம். நடைமுறையில் உபசரித்து ஹிரண்யம் மட்டும் கொடுப்பது என்று சிலர் செய்கிறார்கள். ஆனால் பித்ருக்களை உத்தேசித்து எள்ளும் நீரும் இறைத்தால் பலன் உண்டு என்ற ரீதியில் தர்ப்பணம் மட்டுமே நடைமுறையில் இருக்கிறது. இதற்கும் மெனக்கெடாமல் விட்டுவிட்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.

இதை செய்யாவிடில் 14 ஜென்மங்களுக்கு பாபி ஆகி மிகவும் தாழ்வான நிலையில் பிறப்பான் என்று சொல்லியிருக்கிறது. அதனால் அவசியம் செய்ய வேண்டும். ஒருவேளை முன்னோர்களில் யாரும் சன்னியாசி ஆகி ஜீவன்முக்தி நிலையை அடைந்து மோக்ஷத்தையே அடைந்திருந்தாலும் அவர்களுடைய சந்ததிகள் ‘பிரம்மீ பூத’ என்று முன்னே சொல்லி அவருடைய க்ருஹஸ்த ஆஸ்ரம பெயரை சொல்லி தர்ப்பணங்கள் செய்ய வேண்டும் என்பது தர்ம சாஸ்திரம். அவ்வாறு செய்யாவிடில் பாபம் உண்டு.

மோட்சத்தை அடையாமல் புண்ணிய பாவங்களுக்கு தகுந்தபடி பிறவி எடுத்து இருக்கும் முன்னோர்களுக்கு அவர்கள் இருக்கும் நிலைக்கு தகுந்தபடி இந்த அன்னமோ எள்ளும் ஜலமுமோ ஆகாரமாக ஆகிறது

இந்த ஶ்ராத்தம் பித்ருக்களையும் மாதாமஹர்களையும் உத்தேசித்து செய்யப்படுவது. இரு வர்க்கத்துக்கும் பேதமில்லாமல் செய்ய வேண்டும். (சிலர் மாதாமஹர்களை விட்டுவிடுகிறார்கள். அல்லது மந்திரம் சொல்லாமல் செய்கிறார்கள். இது தவறு)

பார்வணத்தில் முதலில் தர்ப்பணம், பின் ஶ்ராத்தமானாலும் ஹிரண்ய ரூபத்தில் முதலில் ஶ்ராத்தம், பின் தர்ப்பணம்.

தர்ஶ ஶ்ராத்தம் ஹிரண்ய ரூபேன கரிஷ்யே என்று ஸங்கல்பம்

வி.தேவர், வர்கத்வய பித்ரூன், விஷ்ணு என்று மூன்று கூர்ச்சங்களை வைத்து ஶ்ராத்தத்தில் எப்படி (தகுந்தபடி அக்‌ஷதை/ எள் கொண்டுஉபசாரங்கள் செய்வோமோ அப்படி செய்து (அல்லது ஸகலாராதனை ஸ்வர்ச்சிதம் என்று சொல்லி) அஸ்மின் ஹிரண்ய ஶ்ராத்தே கிஞ்சித் ஹிரண்யம் ச தக்‌ஷிணாகம் ச தாம்பூலம் … (வி,தே, வர்கத்வய பித்ரே விஷ்ணவே) இதன் நமம என்று சொல்லி சமர்ப்பணம். இவ்வளவு தக்‌ஷிணை என்றூ எங்கும் சொல்லப்படவில்லையாதலால் இயன்ற படி செய்யலாம். ஏற்கெனெவே வாத்தியாருக்கு கொடுத்துக்கொண்டு இருந்ததையே பகுதி பகுதியாக வைத்துவிடலாம்.

பின் உத்வாஸனம். ஆவாஹனம் செய்தவர்களை வழி அனுப்புவது

பின் ஶ்ராத்தாங்க தர்ப்பணம் கரிஷ்யே என்று ஸங்கல்பித்து  மந்திரம் சொல்லி தர்ப்பணம் செய்ய வேண்டும். மீதி இது அனேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இந்த தர்ப்பணத்தில் தெற்கு நுனியாக கூர்ச்சம்/ தர்ப்பக்கட்டு (ஒற்றைப்படையாக 7 முதல் 15) போட்டு வர்க த்வய பித்ருக்களை ஆவாஹனம் செய்து ஆசனம் அளித்து ஆராதனை செய்து பின் தர்ப்பணம்.

எள்ளை எடுக்கும் போது ஆள்காட்டி விரலும் கட்டை விரலும் சேர்த்து எடுக்கக்கூடாது. அது அசுர முத்திரை. தேவ காரியங்களிலும் அகங்காரத்தின் அடையாளம் என்று சொல்லி ஆள்காட்டி விரலை தவிர்ப்பர்

சுலபமாக நீர் பாத்திரத்தில் எள் சேர்த்து அதை உத்தரணியால் எடுத்து தர்ப்பிக்கலாம். அப்படி செய்தால் ஆசமனாதிகளுக்கு அதை கொட்டிவிட்டு சுத்தம் செய்து வேறு ஜலம் எடுக்க வேண்டும். அல்லது வலது கையின் ஈரமான மோதிர விரலால் (அல்லது கட்டை விரலால்) எள்ளை தொட்டுக்கொண்டு உள்ளங்கையில் ஜலம் எடுத்து அதில் விரலை விட எள் சேர்ந்துவிடும்

செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் ஜன்ம நக்‌ஷத்திரத்தில் செய்யும் தர்ப்பணத்தில் அரிசி சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று சிலர் சொல்லுகிறார்கள். சாஸ்திரம் வாக்கியம் எங்கும் காணவில்லை.

எல்லாம் முடித்து இதன் சாத்குண்யமாக (அதில் ஏற்பட்ட பாபங்களை விலக்க) ஏதேனும் ஒரு ப்ராம்ஹணனுக்கு தக்ஷிணை தர வேண்டும்

பவித்ரம் வாங்கிக்கொள்வது, ஸங்கல்பம், காயே ந வாசா ஆகியவற்றுக்கு அக்ஷதை உண்டு. வழக்கமாக எல்லோரும் செய்வதில் இங்கே கூர்ச்சம் ஆராதனை மட்டுமே அதிகம். பழகாமல் 10 நிமிடம் பழகிவிட்டால் 5 நிமிடம் கூடுதலாக ஆகும். ஆனால் சரியாக செய்ததாகும்.


Thursday, April 7, 2022

ஶ்ராத்தம் - 46 -ஷண்ணவதி ஶ்ராத்தம்




ஷண்ணவதி ஶ்ராத்தங்கள்:

96 நாட்கள் ஶ்ராத்தத்துக்கு உகந்தவை என்கிறார்கள்.  

இது சாஸ்திரத்தில் சொன்ன கணக்கு அல்ல. 96 என்பதும் வருடா வருடம் கூடும் குறையும்

வருட பிறப்பு -1

அயன பிறப்பு (தக்ஷிணாயனம், உத்தராயணம்) -2

ஸௌர மாத பிறப்பு -12

அமாவாசை -12

மன்வாதி 14

யுகாதிகள் 4

பூர்வேத்யு, அன்வஷ்டகா, அஷ்டகா. 12

( இதெல்லாம் ஹேமந்த சிசிர ருதுக்கள்ல வருகிற க்ருஷ்ணபக்ஷ அஷ்டமிகள், அதன் முன் திதி, பின் திதி. )

மஹாலய பக்ஷம் 15

வ்யதீபாதம் 12

வைத்ருதி 12

வ்யதீபாதம் என்பது என்ன? அமாவாசையுடன் ஸ்ரவணம், அஶ்வினீ, அவிட்டம், திருவாதிரை, ஆயில்யம், ம்ருகசீர்ஷம் ஆகிய நக்‌ஷத்திரங்களோ அல்லது ஞாயிற்றுக்கிழமையோ  சேர்ந்தால் அது வ்யதீபாதமாகும்

அஷ்டகா ஶ்ராத்தத்தில் மாதாமஹ வர்க்கம் கிடையாது.

இவற்றில் இரண்டு ஒரே நாளில் வரும் வாய்ப்புகள் அதிகம். 360 நாட்களில் 96 என்றால் தோராயமாக 4 நாட்களுக்கு ஒரு முறை….

இவை அனைத்தையும் ஶ்ராத்தமாக செய்வோர் இக்காலத்தில் யாருமில்லை. அப்படி இருந்தால் சொல்லுங்கள் அந்த மஹானை அவசியம் தரிசித்து நமஸ்காரம் செய்ய வேண்டும்.

96 ஐயும் தர்ப்பணமாக செய்கிறேன் என்கிறார்கள் சிலர். எள்ளும் நீரும் இறைத்தால் அதற்கு பலன் நிச்சயம் உண்டு என்பதைத்தவிர ஒன்றும் சொல்வதற்கில்லை. இப்படி செய்ய சாஸ்திரத்தில் சொல்லவில்லை.

ஆனால் இவற்றை ஹிரண்ய ரூபமாக செய்ய வாய்ப்புண்டு.

அதற்கு: ப்ராம்ஹணர் கிடைக்காவிட்டால் கூர்ச்சம் போட்டு விஶ்வேதேவர், பித்ருக்கள், விஷ்ணு காருண்ய பித்ரு உண்டு என்றால் அவர்கள் என வரித்து இயன்ற படியோ குறைந்தது அக்‌ஷதை எள்ளாலோ ஆராதனை செய்து ஹிரண்யம் தத்தம் செய்து; ஶ்ராத்த அங்கமாக தில தர்ப்பணம் செய்ய வேண்டியது. காருண்ய பித்ருக்கள் அந்த ஶ்ராத்தத்தில் உண்டென்றால் அவர்களுக்கும் ஆவாஹணம் தர்ப்பணம் உண்டு.

ஹிரண்யமாக செய்யப்புகுந்தால் ஒரே நாளில் இரண்டு வந்தால் என்ன செய்வது என்றால்…

அதைப்பற்றி பஞ்சாயத்து நடக்கிறது. ஒரு பக்கம் ஒரே நாளில் இரண்டு ஶ்ராத்தம் கிடையாது என்கிறார்கள். இன்னொரு பக்கம் எல்லாமே செய்ய வேண்டும் என்கிறார்கள். அப்படியானால் எதை முன்னால் செய்வது என்றால் தர்ச ஶ்ராத்தமே.





Tuesday, April 5, 2022

ஶ்ராத்தம் - 45 - ஸங்கல்ப விதான ஶ்ராத்தம்




 

ஸங்கல்ப விதான ஶ்ராத்தம்:

வியாஸரின் வசனப்படி அக்னியை விட்டுவிட்டவர்களுக்கு பார்வணம் என்பது இல்லை. இவர்களுக்கு சங்கல்ப ஶ்ராத்தம் செய்யச்சொல்லுகிறார்அக்னியை விடாதவன் விஷயத்திலேயே அசக்தி என்றால் சங்கல்ப ஶ்ராத்தம். அதில் 

  1. ஆம ஶ்ராத்தம். பக்வமான வஸ்துக்களை சம்பாதிக்க முடியவில்லையானால் பத்னி இல்லாதவன், யாத்ரிகன், ரஜஸ்வலா பதி (அன்றைக்கு பத்னி வீட்டுவிலக்காக இருந்தால்) ஆம ஶ்ராத்தத்தை அந்தணர் செய்யலாம். அந்தணர் அல்லாதோருக்கு எப்போதுமே ஆம ஶ்ராத்தத்தில் அதிகாரம் உள்ளது. மாஸிகம், ப்ரத்யாப்திகம் ஆகியவற்றை ஆமமாக செய்யலாகாது. அக்னியை விட்டவனாக உள்ள வரை ஆமமாக செய்க. ஹோமத்தை வரிக்கப்பட்ட ப்ராஹ்மணன் கையில் செய்ய வேண்டும். ப்ராம்ஹணர்களுக்கு எதை கொடுக்க முடிகிறதோ அந்த அன்னத்தையே/ பக்குவம் செய்யப்படாததையே பிண்டமாக கொடுக்க வேண்டும். மற்றவை பார்வணம் போலவே.

  1. ஹிரண்ய ஶ்ராத்தம்: ஆமமாக முடியாவிடில் இதை செய்க.

ஆமத்துக்கான காரணங்கள் இங்கேயும் பொருந்தும். கூடுதலாக ப்ராம்ஹணர் கிடைக்காவிட்டாலும் புத்ர ஜனனத்திலும் இப்படி செய்யலாம். கூடிய மட்டில் மற்ற விசேஷங்களையும் அனுஷ்டிக்க வேன்டும்.

இதெல்லாமும் முடியாத பக்‌ஷத்தில் பசுவுக்கு புல்லையாவது கொடு. ஸ்நாநம் செய்து எள் ஜலத்தால் தர்ப்பணமாவது செய். நெருப்பினால் காய்ந்த புதரை எரிக்கவாவது செய். உபவாஸம் இருந்து ஶ்ராத்த மந்திரங்களையாவது ஜபி. ஏன் முடியவில்லை என்பதை பொருத்து ஶ்ராத்தம் செய்த பலன் கிடைக்கும்.





Sunday, April 3, 2022

ஶ்ராத்தம் - 44 ஸாம வேதீய ஶ்ராத்தம்




ஸாம வேதிகள்: 2 தந்திரங்கள்.

பரிசேஷன தந்திரம்: ஔபாசனம் போல பரிசேஷனம் செய்து ப்ரதான ஆஹுதி ஹோமம். பெரும்பாலும் - 99% போல- இதுவே நடைமுறையில் உள்ளது.

ஆஜ்ய/ இத்ம தந்திரம் என்பது யாவத்தாக அக்னி முகத்தில் ஆரம்பித்து செய்வது.

ஔபாசனம் நித்யபடி செய்து கொண்டிருந்தாலும் பரிசேஷன தந்திரமே.

பொதுவாக சங்கல்பம், வரணம், ஹோமம், போஜனம், பிண்ட ப்ரதானம், ப்ராஹ்மண உத்வாஸனம். ரிக்வேதிகள் போலவே ஏறத்தாழ

அஷ்டகா ஶ்ராத்தத்தில் மட்டுமே இத்ம தந்திரத்தில் செய்யச்சொல்லி இருக்கிறது. அதில் ஹோமம் ஆனதும் பிண்ட ப்ரதானம். அதற்கு பின்னரே ப்ராம்ஹண வரணம் முதலானவை. (பாரத்வாஜ ஸூத்திரம்). மற்ற ஸுத்திரங்களில் சங்கல்பம், வரணம், ஹோமம், பிண்ட ப்ரதானம்.

எப்படியும் போஜனம் முடிந்த பிறகே பிண்டங்களை உத்வாசனம் செய்ய வேண்டும். (ஆவாஹனம் ஆகிய தேவதைகளை வழி அனுப்புதல்

பித்ருக்கள் இப்போது எந்த ரூபத்தில் இருக்கிறார்கள் என்று தெரியாததால் ஐந்து விதமாக திருப்தி செய்கிறோம். தேவ ரூபமாக இருந்தால் அக்னி, மனுஷ ரூபம் - போஜனம், தர்ப்பணம் பிண்ட ப்ரதானம், வாயஸ பிண்டம் ஆகியவையும் இப்படியே மற்ற ரூபங்களுக்கு.

சிலருக்கு ஹோமம் இருக்கிறது, சிலருக்கு இல்லை. சங்கல்ப ஶ்ராத்தம் என்று ஒன்று. வெறும் ப்ராஹ்மண போஜனத்தால் த்ருப்தி அடைவர். இப்படி நிறைய பேதங்கள் உள்ளன

அஷ்டகா ஶ்ராத்தத்தில் போஜனத்துக்கு முன் பிண்ட ப்ரதானம். இது குறித்து நிறைய விசாரங்கள் நடக்கின்றன. நிறைய ஊஹம் செய்ய வேண்டி இருக்கிறது.


Saturday, April 2, 2022

ஶ்ராத்தம் - 43 ரிக் வேதீய ஶ்ராத்தம் -2




 

தீபத்தை பூஜை அறையில் கொண்டு வைக்கலாம். பெரிய விளக்குடன் சேர்க்கவும் செய்யலாம்.

பின் ஹோமம். இரண்டே ஹோமம். சோமாய பித்ருமதே, அக்னி கவ்யவாஹனாய.

ஏஷதே தத என்று அன்னத்தை தொட்டுக்கொண்டு சொல்வது கிடையாது.

போஜன பாத்திரத்தில் அன்னம் வைத்தபின் ஸ்வதேயம் என்று ஹோம சேஷம் வைக்க வேண்டும். ‘அன்னம் அன்னேன’ என்று சூத்திரம் இருப்பதால். உபவீதியாகவே அன்னம் வைக்க வேண்டும். ப்ராசீனாவீதியாக அன்னம் வைத்தால் அதை சாப்பிடக்கூடாது என்று இருக்கிறது. (ஏகோதிஷ்டத்துக்கு சமானமாகிவிடும் என்று)  

பித்ருவுக்காக உத்தேசித்ததை மற்ற அன்னத்துடன் சம்பந்தப்படுத்தக்கூடாது என்கிறார்கள். முன் காலத்தில் பித்ருக்கள் விஶ்வேதேவர்களுக்கு தனித்தனியாக அன்னம் வடிப்பதாக சொல்கிறார்கள். விகிரான்னம் அவரவரது அன்னத்திலிருந்து. பித்ருவுக்கு வைத்த அன்னத்தின் மீதி கர்த்தாவுக்கும் பத்னிக்கும் மட்டும் கொடுக்கலாம். மற்றபடி எல்லாம் யாஜுஷத்துக்கு சமானம்

திருப்தி கேட்கும் முன் பிண்டப் பிரதானம். (ஸாம வேதிகளுக்கும் அப்படியே). பின் விகிரான்னம். (ரிக்வேதிகளுக்கு) வாயஸ பிண்டம் என்று மற்றவை யஜுர்வேதிகள் போல.

பாணி ஹோமம்: இத்மம் ஹோமம் தவிர எல்லாம் உண்டு. அதாவது பாத்திர சாதனம் உண்டு. பிண்ட பித்ரு யக்ஞம் போலவே. தர்ப்பம் எல்லாம் ஆக்னே ஆக்ரம். (நுனிகள் தென்கிழக்கு திசையை பார்த்து)

யஜுர் வேதிகளுக்கு ஸ்வதேயம் வைக்கும் முன் ஹோமம். ஆனால் இங்கே ரிக் வேதிகளுக்கு ஹோமம் இல்லை. ஆகவே அந்த நேரத்தில் அந்த இடத்தில் மேக்ஷண கரண்டியை வைத்துக்கொண்டு ஹோமத்திற்கான இரண்டு மந்திரங்கள் சொல்லி பித்ரு போக்தா கையில் அன்னத்தை வைத்துவிட வேண்டியது. அவர் அதை இலையில் வைத்துக்கொண்டு மற்றதுடன் உண்டு விடுவார். மீதியிலிருந்து ஸ்வதேயம் என்று இலையில் வைப்பது, பிண்டப்ரதானம் ஆகியவை. மற்றபடி ப்ரம்ஹ யக்ஞம், போஜனம் போன்ற எல்லாம் பொதுவானவை.