Pages

Wednesday, March 7, 2018

மேலும் கோளாறான எண்ணங்கள் - 3





ஏன் இப்படி நம்மை நாமே வருத்திக்கறோம்?
ரெண்டு பேர் இருந்தா அங்க பத்து பிரச்சினை இருக்கும். லோகத்தில என்ன ஜனத்தொகை? எத்தனை பிரச்சினை இருக்கும்? இதுக்கெல்லாம் கவலைப்பட்டு பிரயோசனமில்லை. சில பிரச்சினைகள் அவ்வப்போது மீடியாவோட பசிக்கு ஏற்ப தேவைக்கு ஏற்ப தலைதூக்கும். அப்புறம் காணாமப்போகும். ஏன், பிரச்சினை தீர்ந்ததுன்னா? இல்லை. அது அப்படியேத்தான் இருக்கும். வேறு தேவைகள், ஃபோகஸ் மாறுதல்! சிரியால வருஷக்கணக்கா ஒரே மதத்தின் இரண்டு பிரிவினர் அடிச்சு கொன்னுக்கறாங்க. திடீர்ன்னு இப்ப அது கவனத்துக்கு வருதுன்னா அது ஒரு தேவை. போட்டோஷாப் செஞ்சு படங்கள் போட்டு கவனத்தை ஈர்த்து ரேட்டிங் வாங்கற சமாசாரம்.
இதுல இருந்து எப்ப மீளப்போறோம்? லோகத்து பிரச்சினை எல்லாத்தையும் என்னால தீர்க்க முடியாது; அது என் வேலையும் இல்லை. என்னை சுத்தி நடக்கற சில விஷயங்களில் ஏதேனும் செய்ய முடியலாம். அது அவசியமான்னு பார்க்க வேண்டி இருக்கு.
எல்லா நல்லது கெட்டதும்- அது எவ்வளவு மோசமா தோணினாலும்- பகவானோட ப்ளான்லதான் நடக்கிறது. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்ற படி அவரவர் கர்மாவை அனுபவிக்கிறார்களே ஒழிய வேறு ஒன்றுமில்லை. இதில் நம் புரிதல் திடமாக இருந்தால் ஒழிய நிம்மதிக்கு வழியே இல்லை. நடப்பதில் நாமாக மூக்கை நுழைக்காமல் நாம் செய்ய வேண்டியது ஏதேனும் இருந்தால் அதை பகவான் நிச்சயம் செய்ய வைப்பான் என்கிற புரிதலோடு நடப்பதை வெறுமே கவனிக்க வேண்டும். சினிமா பார்க்கிற மாதிரி என்ன சோகம் சந்தோஷம் இருந்தாலும் அதில் முழுக்க அழுந்தி விடாமல், 'நடக்க வேண்டியது நடக்கவே நடக்கும், நடவாதது என்ன முயற்சிக்கினும் நடவாது' என்ற நிச்சயத்தோட பார்க்கக்கத்துக்கொண்டு விட்டால் நலம்!

Tuesday, March 6, 2018

மேலும் கோளாறான எண்ணங்கள் - 2





அனுபவம் போறாத சின்ன வயசுல குழந்தைகளை இப்படி செய்ய அப்படி செய்; இது தப்புன்னு சொல்கிற பாத்யதை பெறோருக்கு இருக்கு. அது அவங்களோட கடமையும் கூட. ஆனா தோளுக்கு மிஞ்சினா தோழன்னு சொல்லி அவங்களுக்கே வயசு ஆன பிறகு தன்னிச்சையா முடிவெடுக்க அனுமதிக்கறாங்க. இது சரியா அது சரியான்னு அவங்களுக்குள்ள விவாதம் நடந்தாலும் முடிவும் அதன் விளைவை அனுபவிக்கறதும் அவரவர் உரிமை ஆயிடும்.
இப்படி விட்டாச்சுன்னா பிரச்சினை இல்லை. பலரும் இப்படி விடறதில்லை. நீ ஏன் அப்படி செஞ்சே; இப்படி செஞ்சே? நீ கெட்டவன் நல்லவன்னு எல்லாம் கமெண்ட் அடிச்சு நம்மோட வாழ்கையையும் மத்தவங்க வாழ்க்கையையும் நரகமாக்கறதுல நாம் எக்ஸ்பெர்டா இருக்கோம். வெளிப்படையா கமெண்ட் செய்யலைன்னாலும் அப்படி நினைக்கறதிலேயே பிரச்சினை இருக்கு.
நம்மைத்தவிர எல்லாரும் தப்பு செய்யறாங்கன்னு நினைக்க ஆரம்பிப்போம். வாழ்கையே நரகமாக்க இதை விட சிறந்த உபாயம் கிடையாது. எரிச்சல், அடிக்கடி மத்தவங்களோட சண்டை... நிம்மதியே இராது.
வீட்டில அலுவலகத்தில சுத்துப்பட்ட இடத்திலன்னு எல்லா இடங்களிலேயும் பிரச்சினை. இதெல்லாம் இல்லைன்னா போதாக்குறைக்கு இப்பல்லாம் சமூக வலைதளங்கள் இருக்கவே இருக்கு. மத்தவங்களை தரக்குறைவா விமர்சிக்கறது ஒரு பக்கம்ன்னா அதுக்கு பொங்கறது இன்னொரு பக்கம். மோடி ராகுல்ன்னு சாடல். ஏண்டா மோடியே அவரை பத்தி விமர்சிக்கறதைப்பத்தி கவலைப்படலையே நீ ஏன் கவலைப்படறன்னு கேட்டா பதில் இருக்காது!
ஏன் இப்படி நம்மை நாமே வருத்திக்கறோம்?

Monday, March 5, 2018

மேலும் கோளாறான எண்ணங்கள் -1





மாசி மாசம் எங்க ஊர்ல நல்ல மாசம். மெதுவா குளிர் போயிட்டிருக்கும். விடிகாலை மேற்கிருந்து குளிர்ந்த காத்து. அது நல்லாவே இருக்கும். காலை பனி மூட்டம் கொஞ்சம். மேகங்கள். வெயில் மெதுவா ஒன்பது மணி போலத்தான் ஆரம்பிக்கும். அதிக மேகங்கள் இல்லாத பட்சத்தில் மதியம் கொஞ்சம் சூடாவே இருக்கும். பண்ணிரண்டு மணிக்கு கிணத்து தண்ணி குளியல் சுகமா இருக்கும்! ஒரு மணியாச்சுன்னா ஜிலு ஜிலுன்னு கடல்காத்து வீச ஆரம்பிச்சுடும். அதனால பகல்ல ரூம்ல ஃபேன் இல்லாம சௌக்கியமா இருக்கலாம்.
இப்படி வருஷம் முழுக்க இருக்குமானா இல்லை! வைகாசில மண்டைய பொளக்கிற வெயில். ப்ரிட்ஜ்குள்ள புகுந்துக்கலாமான்னு தோணும். கார்திகை மாசம் சொத சொதன்னு எங்க பார்த்தாலும் ஈரமா... மார்கழில ரெண்டாவது போர்வை கேட்கும் குளிர்.... இப்படி எல்லாம் மாறிண்டேதான் இருக்கும். அதுக்காக எப்பவும் இதை குறை சொல்லறோமா? இல்லையே! அதிகப்படியா கடும் கோடையில வெயிலை திட்டுவோம்; வெளியே போகவே முடியாத படிக்கு மழை பெஞ்சா அதை திட்டுவோம்தான். ஆனா பொதுவா வெதர் இப்படித்தான் இருக்கும்ன்னு சொல்லி அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு போய் விடுகிறோம். நாம இருக்கிற சூழ்நிலைக்கு தகுந்தாப்போல அப்படி செய்கிறோம். அதுவே புத்திசாலித்தனம்.
மனிதர்களும் இப்படித்தான். மிருகங்களும் இப்படித்தான். வெதர் போலவே இவையும் ஒவ்வொரு நேரம் ஒரு மாதிரி இருக்கும். சுகமா சில சமயம்; எரிச்சலூட்டுகிறா மாதிரி சில சமயம்.
ஆனா வெதருக்கு தகுந்தபடி அட்ஜஸ்ட் செய்கிற நாம் மனிதர்களுக்கு அப்படி செய்யறதில்லை.
ஒவ்வொத்தருக்கும் இதுதான் சரி இது தப்புன்னு ஒரு கான்சப்ட் இருக்கு. இந்த கான்சப்ட் சிலருக்கு தர்ம சாஸ்திரத்தை ஒட்டி; சிலருக்கு யோசிச்சு இப்படித்தான்னு முடிவு செஞ்சது. சிலருக்கு ஜஸ்ட் லைக் தட்... அப்படித்தான்னு.... எப்படி இருந்தாலும் இதுவே சரின்னு ஒரு கான்சப்ட். இது படி நாம நடந்துக்கலாம் என்கிறதுல பிரச்சினை இல்லை. ஆனா அது போலவே மத்தவங்க நடந்துக்கணும்ன்னு நாம நினைக்கிறப்ப கொஞ்சம்... கொஞ்சமென்ன? நிறையவே பிரச்சினைகள் வரது.
-தொடரும்

Friday, March 2, 2018

கிறுக்கல்கள் - 180





மாஸ்டர் பகவத் கீதையை மேற்கோள் காட்டி 'இறைவன் பக்தனை அமைதியான இதயத்தை பகவானின் திருவடிகளில் வைத்துக்கொண்டு கடும் சண்டையில் ஈடு படுமாறு சொன்னார்' என்றார்.

சீடர் ஒருவர் கேட்டார், அது எப்படி சாத்தியம்?

உன் செயல் இப்படிப்பட்ட விளைவைத்தான் கொடுக்க வேண்டும் என்று நினைக்காமல் செயல்கள் எதை கொடுத்தாலும் ஏற்றுகொள்வதன் மூலம்! என்றார் மாஸ்டர்.

Thursday, March 1, 2018

கிறுக்கல்கள் - 179





இறப்பால எனக்கு வர அமைதியை நான் வரவேற்கிறேன்னு ஒருவர் சொன்னார்.
மாஸ்டர் கேட்டார்: இப்படி வரவேற்கிறவன் யார்?
நான்தான்!
நான் இறந்த பிறகே வரும் அமைதியை உன் 'நான்' எப்படி அனுபவிக்க முடியும்?

பின்னால் இந்த கதையை சொன்னார்: பட்டனும் ரிப்பனும் விற்று வறுமையிலேயே வாழ்கை நடத்திய வியாபாரி இறந்து போனார். அவர் விட்டுப்போனது எக்கச்சக்கமான இன்ஸ்யூரன்ஸ் பாலிசி! பெரும் தொகை கிடைத்த மனைவி அழுது கொண்டே சொன்னார்: பாருங்க, ராப்பகலா உழைச்சும் கடும் வறுமையிலேயே இருந்தோம். இவ்வளோ செல்வம் கடவுள் அனுப்பி கிடைச்சு இருக்கு; அத அனுபவிக்க அவர் இல்லியே!