Pages

Tuesday, March 6, 2018

மேலும் கோளாறான எண்ணங்கள் - 2





அனுபவம் போறாத சின்ன வயசுல குழந்தைகளை இப்படி செய்ய அப்படி செய்; இது தப்புன்னு சொல்கிற பாத்யதை பெறோருக்கு இருக்கு. அது அவங்களோட கடமையும் கூட. ஆனா தோளுக்கு மிஞ்சினா தோழன்னு சொல்லி அவங்களுக்கே வயசு ஆன பிறகு தன்னிச்சையா முடிவெடுக்க அனுமதிக்கறாங்க. இது சரியா அது சரியான்னு அவங்களுக்குள்ள விவாதம் நடந்தாலும் முடிவும் அதன் விளைவை அனுபவிக்கறதும் அவரவர் உரிமை ஆயிடும்.
இப்படி விட்டாச்சுன்னா பிரச்சினை இல்லை. பலரும் இப்படி விடறதில்லை. நீ ஏன் அப்படி செஞ்சே; இப்படி செஞ்சே? நீ கெட்டவன் நல்லவன்னு எல்லாம் கமெண்ட் அடிச்சு நம்மோட வாழ்கையையும் மத்தவங்க வாழ்க்கையையும் நரகமாக்கறதுல நாம் எக்ஸ்பெர்டா இருக்கோம். வெளிப்படையா கமெண்ட் செய்யலைன்னாலும் அப்படி நினைக்கறதிலேயே பிரச்சினை இருக்கு.
நம்மைத்தவிர எல்லாரும் தப்பு செய்யறாங்கன்னு நினைக்க ஆரம்பிப்போம். வாழ்கையே நரகமாக்க இதை விட சிறந்த உபாயம் கிடையாது. எரிச்சல், அடிக்கடி மத்தவங்களோட சண்டை... நிம்மதியே இராது.
வீட்டில அலுவலகத்தில சுத்துப்பட்ட இடத்திலன்னு எல்லா இடங்களிலேயும் பிரச்சினை. இதெல்லாம் இல்லைன்னா போதாக்குறைக்கு இப்பல்லாம் சமூக வலைதளங்கள் இருக்கவே இருக்கு. மத்தவங்களை தரக்குறைவா விமர்சிக்கறது ஒரு பக்கம்ன்னா அதுக்கு பொங்கறது இன்னொரு பக்கம். மோடி ராகுல்ன்னு சாடல். ஏண்டா மோடியே அவரை பத்தி விமர்சிக்கறதைப்பத்தி கவலைப்படலையே நீ ஏன் கவலைப்படறன்னு கேட்டா பதில் இருக்காது!
ஏன் இப்படி நம்மை நாமே வருத்திக்கறோம்?

No comments: