Pages

Monday, March 5, 2018

மேலும் கோளாறான எண்ணங்கள் -1





மாசி மாசம் எங்க ஊர்ல நல்ல மாசம். மெதுவா குளிர் போயிட்டிருக்கும். விடிகாலை மேற்கிருந்து குளிர்ந்த காத்து. அது நல்லாவே இருக்கும். காலை பனி மூட்டம் கொஞ்சம். மேகங்கள். வெயில் மெதுவா ஒன்பது மணி போலத்தான் ஆரம்பிக்கும். அதிக மேகங்கள் இல்லாத பட்சத்தில் மதியம் கொஞ்சம் சூடாவே இருக்கும். பண்ணிரண்டு மணிக்கு கிணத்து தண்ணி குளியல் சுகமா இருக்கும்! ஒரு மணியாச்சுன்னா ஜிலு ஜிலுன்னு கடல்காத்து வீச ஆரம்பிச்சுடும். அதனால பகல்ல ரூம்ல ஃபேன் இல்லாம சௌக்கியமா இருக்கலாம்.
இப்படி வருஷம் முழுக்க இருக்குமானா இல்லை! வைகாசில மண்டைய பொளக்கிற வெயில். ப்ரிட்ஜ்குள்ள புகுந்துக்கலாமான்னு தோணும். கார்திகை மாசம் சொத சொதன்னு எங்க பார்த்தாலும் ஈரமா... மார்கழில ரெண்டாவது போர்வை கேட்கும் குளிர்.... இப்படி எல்லாம் மாறிண்டேதான் இருக்கும். அதுக்காக எப்பவும் இதை குறை சொல்லறோமா? இல்லையே! அதிகப்படியா கடும் கோடையில வெயிலை திட்டுவோம்; வெளியே போகவே முடியாத படிக்கு மழை பெஞ்சா அதை திட்டுவோம்தான். ஆனா பொதுவா வெதர் இப்படித்தான் இருக்கும்ன்னு சொல்லி அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு போய் விடுகிறோம். நாம இருக்கிற சூழ்நிலைக்கு தகுந்தாப்போல அப்படி செய்கிறோம். அதுவே புத்திசாலித்தனம்.
மனிதர்களும் இப்படித்தான். மிருகங்களும் இப்படித்தான். வெதர் போலவே இவையும் ஒவ்வொரு நேரம் ஒரு மாதிரி இருக்கும். சுகமா சில சமயம்; எரிச்சலூட்டுகிறா மாதிரி சில சமயம்.
ஆனா வெதருக்கு தகுந்தபடி அட்ஜஸ்ட் செய்கிற நாம் மனிதர்களுக்கு அப்படி செய்யறதில்லை.
ஒவ்வொத்தருக்கும் இதுதான் சரி இது தப்புன்னு ஒரு கான்சப்ட் இருக்கு. இந்த கான்சப்ட் சிலருக்கு தர்ம சாஸ்திரத்தை ஒட்டி; சிலருக்கு யோசிச்சு இப்படித்தான்னு முடிவு செஞ்சது. சிலருக்கு ஜஸ்ட் லைக் தட்... அப்படித்தான்னு.... எப்படி இருந்தாலும் இதுவே சரின்னு ஒரு கான்சப்ட். இது படி நாம நடந்துக்கலாம் என்கிறதுல பிரச்சினை இல்லை. ஆனா அது போலவே மத்தவங்க நடந்துக்கணும்ன்னு நாம நினைக்கிறப்ப கொஞ்சம்... கொஞ்சமென்ன? நிறையவே பிரச்சினைகள் வரது.
-தொடரும்

No comments: