Friday, November 30, 2018
Thursday, November 29, 2018
பறவையின் கீதம் - 74
சீடன்
குருவைத்தேஎடிபோய் சொன்னான்:
“நான்
உங்களுக்கு என் சேவையை
அர்ப்பணிக்க வந்திருக்கிறேன்"
குரு
அமைதியாக சொன்னார்:
“அந்த 'நான்'
ஐ விட்டுவிடு.
சேவை தானாக
நடக்கும்!”
உன்னிடம்
உள்ளதை எல்லாம் ஏழைகளுக்கு
கொடுத்துவிடலாம். உன்
உடலும் விழலாம். அப்போதும்
அன்பு சுரக்காது.
உன்
பொருட்களை நீயே வைத்துக்கொள்.
அகங்காரத்தை
மட்டும் விட்டுவிடு.
அன்பு உடனே
சுரக்கும்.
Wednesday, November 28, 2018
பறவையின் கீதம் - 73
நெய்ஷாபூரிலிருந்து
ஒரு கதை.
காதலன்
காதலியின் வீட்டுக்குப்போனான்.
கதவைத்தட்டினான்.
உள்ளிருந்து
காதலி "யார்
கதவை தட்டுறது?” என்று
கேட்டாள்.
“நான்தான்"
“இங்கே
ரெண்டு பேருக்கு இடமில்ல.
போங்க"
காதலனுக்கு
ஒன்றும் புரியவில்லை.
சில வருடங்கள்
அது பற்றி யோசித்தான்.
பின் ஒரு
நாள் சென்று கதவைத்தட்டினான்.
உள்ளிருந்து
காதலி "யார்
கதவை தட்டுறது?” என்று
கேட்டாள்.
“நீதான்"
கதவு
உடனடியாக திறந்தது.
Tuesday, November 27, 2018
பறவையின் கீதம் - 72
ஒரு
உப்பு பொம்மை ஆயிரம் மைல்கள்
நடந்து கடலின் ஓரத்துக்கு
போயிற்று. அதற்கு
கடலைப்பார்த்து ஒரே ஆச்சரியம்.
அது வரை அது
போல அலையும் எதையுமே
பார்த்ததில்லையே!
“உள்ளே
வந்து பார்!” என்றது
கடல்.
பொம்மையும்
உள்ளே இறங்கியது.
உள்ளே
போகப்போக அது கரைய ஆரம்பித்தது.
அதன் கடைசி
துணுக்கு கரையும் முன் அது
கடலைப்பார்த்து சொன்னது
"நான்
யார்ன்னு இப்ப புரிஞ்சு
போச்சு! ஆமா
நீங்க யார்?”
Monday, November 26, 2018
பறவையின் கீதம் - 71
ஷாம்ஸ்
எ தப்ரிஃஜி ஸுஃபி ஞானி.
தன்னைப்பற்றி
இந்த கதையை சொன்னார்.
நான்
சிறு வயதிலிருந்தே எங்கும்
பொருந்தாதவனாக கருதப்பட்டேன்.
யாருமே என்னை
புரிந்து கொள்ளவில்லை.
என் தந்தையே
ஒரு முறை என்னிடம் இப்படி
சொன்னார்:
உன்னை
பைத்தியக்காரர் விடுதியில்
சேர்க்குமளவுக்கு நீ
பைத்தியக்காரனாகவும் இல்லை.
மடாலயத்தில்
சேர்க்கும் அளவுக்கு வைராக்கியமும்
இல்லை. உன்னை
என்ன செய்வது?”
நான்
சொன்னேன்: “ஒரு
முறை வாத்தின் முட்டையை யாரோ
கோழிக்கூண்டில் வைத்து
விட்டார்கள். அது
பொரிந்து வாத்துக்குஞ்சும்
வெளி வந்தது. கோழியுடன்
நடந்து போயிற்று. நீரின்
அருகே வந்ததும் இயல்பாக அதில்
இறங்கி நீந்த ஆரம்பித்துவிட்டது.
பாவம் கோழி!
இது நீரில்
முழுகிவிடப்போகிறதே என்று
கவலையில் கரையில் நின்று
கொண்டு சத்தமிட்டுக்கொண்டு
இருந்தது. என்
அருமைத்தந்தையே நான் கடலின்
உள் சென்றுவிட்டேன்.
இதுவே என்
வீடு என்று உணர்கிறேன்.
நீங்கள்
கரையிலேயே இருக்க நினைத்தால்
நானா பொறுப்பு? ”
யார்
தன் இயல்பை அறிகிறார்களோ
அவர்கள் முன்னே போகிறார்கள்.
தன் இயல்பை
அறியாதவர்கள் தன்னை வேறாக
எண்ணி அழிந்து போகிறார்கள்.
(முன் கதையையும்
படிக்கவும்)
Subscribe to:
Posts (Atom)

