ஷாம்ஸ்
எ தப்ரிஃஜி ஸுஃபி ஞானி.
தன்னைப்பற்றி
இந்த கதையை சொன்னார்.
நான்
சிறு வயதிலிருந்தே எங்கும்
பொருந்தாதவனாக கருதப்பட்டேன்.
யாருமே என்னை
புரிந்து கொள்ளவில்லை.
என் தந்தையே
ஒரு முறை என்னிடம் இப்படி
சொன்னார்:
உன்னை
பைத்தியக்காரர் விடுதியில்
சேர்க்குமளவுக்கு நீ
பைத்தியக்காரனாகவும் இல்லை.
மடாலயத்தில்
சேர்க்கும் அளவுக்கு வைராக்கியமும்
இல்லை. உன்னை
என்ன செய்வது?”
நான்
சொன்னேன்: “ஒரு
முறை வாத்தின் முட்டையை யாரோ
கோழிக்கூண்டில் வைத்து
விட்டார்கள். அது
பொரிந்து வாத்துக்குஞ்சும்
வெளி வந்தது. கோழியுடன்
நடந்து போயிற்று. நீரின்
அருகே வந்ததும் இயல்பாக அதில்
இறங்கி நீந்த ஆரம்பித்துவிட்டது.
பாவம் கோழி!
இது நீரில்
முழுகிவிடப்போகிறதே என்று
கவலையில் கரையில் நின்று
கொண்டு சத்தமிட்டுக்கொண்டு
இருந்தது. என்
அருமைத்தந்தையே நான் கடலின்
உள் சென்றுவிட்டேன்.
இதுவே என்
வீடு என்று உணர்கிறேன்.
நீங்கள்
கரையிலேயே இருக்க நினைத்தால்
நானா பொறுப்பு? ”
யார்
தன் இயல்பை அறிகிறார்களோ
அவர்கள் முன்னே போகிறார்கள்.
தன் இயல்பை
அறியாதவர்கள் தன்னை வேறாக
எண்ணி அழிந்து போகிறார்கள்.
(முன் கதையையும்
படிக்கவும்)
No comments:
Post a Comment