Pages

Monday, May 2, 2011

நாந்தீ ஶ்ராத்தம்.




இன்னொரு வலைப்பூவில் பின்னூட்டம் போட விஷயம் பெரிதாக இருக்கிறது என்பதால் இங்கே பதிவு:

சுப கர்மாக்கள் செய்யும் போது எல்லா தேவர்கள் ஆசியுடன் செய்கிறோம். குல தெய்வ வழிபாடு உண்டு. அதே போல பிருக்களின் ஆசிர்வாதங்களுடனும் செய்ய வேண்டும். இதுவே சுமங்கலி ப்ராத்தனை என்றும் நாந்தீ என்றும் அறிப்படுகிறது. இது சூத்திரங்களில் விதிக்கப்படவையே ஆகும். அதனால் அச்சானியமாக இருப்பதாக நினைத்து விட்டுவிடக்கூடாது. இதை சூத்திரங்களில் 'ப்ரம்மணான் போஜயித்வா, ஆஶிஷோ வாசயித்வா' என்ற வாக்கியங்களும் உணர்த்துகின்றன.

பித்ருக்களில் பலவகை உண்டு.அதில் நாந்தீமுகர் என்பவரே சுப காலங்களில் ஆராதிக்கத்தக்கவர். சுமங்கலி ப்ரார்த்தனை, சமாராதனை என்பதைப்போலவே இவையும் செய்யப்பட வேண்டும். ஶ்ரத்தை உள்ளோர் இன்னும் அன்ன ரூபமாகவே - அதாவது ஹவிஸ் வைத்து நாம் வழக்கமாக செய்யும் ஶ்ராத்தம் என்பதை அறிவது போலவே செய்ய வேன்டும். வித்தியாசங்கள் உண்டு. உபவீதத்தை இடமாக போட்டுக் கொள்வதில்லை. எள்ளைத்தொடுவதில்லை. பதிலாக மங்கள அக்ஷதை பயனாகும். வஸு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூப பித்ரு-பிதாமஹ-ப்ரபிதாமஹ என்பதற்குப்பதிலாக - நாந்தீமுக என கூறப்படும்.

பித்ருக்கள் பலவகையாக இருப்பதுபோலவே விஶ்வேதேவர்களும். இங்கே சுப காரியங்களுக்கு உள்ளோர் ஸத்ய வஸு என பெயருடையோர்.

இன்னொரு வித்தியாசம் இங்கு ஸ்த்ரீக்களே முதலில் வரிக்கப்படுவர். அவர்களுக்கே முதலில் பூஜை. அதே போல வழக்கமாக கீழே ஆரம்பித்து மேலே அன்னை-பாட்டி-கொள்ளுபாட்டி என்று போகாமல்; அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா என்று போகாமல் மேலிருந்து கீழே வரிசையாக வரும்.
ஹோமத்திலும் இதே போல் நாந்தீமுக என்ற அடைமொழியுடன் ஹோமம்.

உத்தமமானது விதிவத்தாக ப்ராம்ஹணர்களை வரித்து வருட ஶ்ராத்தம் போல செய்வது.

மத்திமம் ஆம ஶ்ராத்தம் என வாழை இலையில் அரிசி வாழைக்காய், தக்ஷிணை, வஸ்த்ரம் வைத்து கொடுப்பது.
இதுவும் இல்லாவிட்டால் நிறைய தக்ஷிணை கொடுத்து ஆசீர்வாதம் செய்யச் சொல்ல வேண்டும். சாப்பாடு போட வேண்டிய இடத்தில் காப்பிக்குக்கூட வராத பணத்தை கொடுத்து நாந்தீ செய்ததாக எண்ணக்கூடாது.

7 comments:

Geetha Sambasivam said...

பையர் பூணூலில் சாப்பாடு போட்டுப் பண்ணினோம். பொண்ணு கல்யாணத்திலே தனிச் சமையல் சமைச்சுப் போட்டது. பையர் கல்யாணத்திலே தனிச் சமையல் இருந்தாலும் யாரும் சாப்பிட ஒத்துக்கலை. அரிசி, வாழைக்காய் தான், ஒன்பது பேர் சொல்லி அப்புறமா நிறையப் பேர் வந்தாங்க. சந்தோஷமா இருந்தது. ஒரே குறை சாப்பிட மாட்டேன்னு சொன்னது தான்.

இராஜராஜேஸ்வரி said...

உத்தமமானது விதிவத்தாக ப்ராம்ஹணர்களை வரித்து வருட ஶ்ராத்தம் போல செய்வது.//
நிறைய சத் விஷயங்கள் அறிய முடிந்தது. நன்றி.

Jayashree said...

என் முந்தைய கமென்ட்ஸ் ஐ ப்லாகெர் முழுங்கிடுத்து:)) ஆமாம் இப்படித்தான் எங்க பெரியவர்களும் சொல்லுவா.

திவாண்ணா said...

//ஒரே குறை சாப்பிட மாட்டேன்னு சொன்னது தான்.//

இப்பல்லாம் ஒரே நாளிலே ரெண்டு மூணு இடம் போறதாலே எங்காவது ஒரு இடத்திலதான் சாப்பிடுவாங்க. அப்புறம் சாப்பாடு போடுகிறதாலே அது பார்ணவ ஶ்ராத்தம் மாதிரி ஆகாது.

திவாண்ணா said...

நன்றி ராஜராஜேஸ்வரி!

திவாண்ணா said...

என்ன ஜெயஸ்ரீக்கா, 'குழந்தை அழுதுது, கிரைப் வாட்டர் கொடு' மாதிரி இருக்கு! பெரியவா காலத்திலேயும் ப்லாகர் இருந்ததா? ;-))))))))))))))

SRINIVAS GOPALAN said...

திரு திவா அவர்களே - நமஸ்காரம்
நாந்தி பற்றி திருமதி கீதா சாம்பசிவம் கொடுத்த சுட்டி மூலம் இங்கே வந்தேன். நாந்தி குறித்து அருமையான விளக்கங்கள் - ஏன் செய்ய வேண்டும் என்று.
பிற பதிவுகளையும் படிக்கிறேன்.