अहिंसासत्यास्तेयब्रह्मचर्यापरिग्रहा यमाः ।।30।।
அஹிம்°ஸாஸத்யாஸ்தேயப்³ரஹ்மசர்யாபரிக்³ரஹா யமா: || 30||
அஹிம்°ஸா = அஹிம்சை, ஸத்ய = ஸத்யம், அஸ்தேயம், ப்³ரஹ்மசர்யம், அபரிக்³ரஹா (ஆகியன) யமா: = யமம் எனப்படும்.
அஹிம்சை என்பது எப்போதும் மன மொழி மெய்களால் எந்த பிராணிக்கும் துரோகம் - தீங்கு செய்யாமல் இருத்தல். இதுவே யோக சாதனங்களுள் மிகச்சிறந்ததாகும்.
வாக்கும் மனசும் உண்மையிலேயே நிற்பது ஸத்யம். பிறருக்கு தீங்கு ஏற்படாமல் பேசுவது என்பது ஸத்யம். இது மிக நுட்பமானது.
ஒரு காலம் ஒரு மகரிஷி காட்டில் தவம் செய்து கொண்டு இருந்தார். ஸத்யதபஸ் என்று பெயர். எக்காலமும் உண்மை பேசுவது என்பது அவர் கொண்டிருந்த ஒரு விரதம். ஒரு நாள் இவர் தவம் கலைந்து எழும் வேளை சில திருடர்கள் அரச மாளிகையில் களவாடி காட்டு வழியே ஓடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ரிஷி தவம் செய்து கொண்டிருந்த வழியே ஓடினர். கடும் கோபத்துடன் துரத்தி வந்த அரச சேவகர்கள் ரிஷியைப்பார்த்து "திருடர்கள் இவ்வழியே போனார்களா?" என்று கேட்க ரிஷியும் திருடர்கள் போன வழியை காட்டிக்கொடுத்தார். அந்த வழியே போன சேவகர்கள் திருடர்களை பிடித்து அடித்தனர். அதில் ஒரு திருடன் அடி தாங்காது இறந்தான். இந்த ஜீவன் இறக்க யார் காரணம் என விசாரித்த பெரியோர்கள் ரிஷியே காரணம் என தீர்ப்பளித்தனர். ரிஷி மௌனமாக இருந்திருந்தால் திருடர்களை பிடித்திருக்க மாட்டார்கள்; அடித்திருக்க மாட்டார்கள்; ஒரு ஜீவனும் இறந்து போயிருக்காது என்பது வாதம். ஹிம்சை தருமானால் உண்மையை சொல்லாதிருப்பதே ஸத்யம்.
ஸத்யம் ப்3ரூயாத் ப்ரியம் ப்3ரூயாத் ந ப்3ரூயாத் ஸத்யம் அப்ரியம்|
ப்ரியம் ச நாந்ருதம் ப்3ரூயாத் ஏஷ த4ர்மஸ் ஸநாதந: || -மஹா பாரதம்.
பிறருக்கு தீங்கிழைக்காத உண்மையே பேச வேண்டும். உண்மையானாலும் பிறருக்கு தீங்கிழைக்குமானால் மௌனத்தை அநுஷ்டிக்கவேண்டும். பிறருக்கு ப்ரியமாக இருக்கும் என்று பொய் சொல்வதும் தகாத செயல். இது மஹாபாரதத்தில் வரும் கதை. இப்படி செய்வதே வேத சாஸ்த்திரங்களில் சொல்லிய புராதனமான தர்மமாகும்.
சாஸ்திர சம்மதம் இல்லாமல் பிறர் சொத்தை கைப்பற்றுதலே ஸ்தேயம் என்ற திருட்டு. இதை விலக்குவதே அஸ்தேயம். ஒருவனுக்கு கொடுக்க மனமில்லாத போது பல காரணங்கள் காட்டி அவனைக் கட்டாயப்படுத்தி அவனது பொருளை பெற்றுக்கொள்வதும் திருட்டாகும்.
முன் பார்த்த கதையில் ரொம்பவே கடுமையா இருக்கே என்று நினைத்தால் அடுத்த கதையை படியுங்கள். இதுவும் மஹாபாரதத்தில் ராஜ தர்ம பர்வத்தில் 24 ஆவது அத்தியாயத்தில் வருவது.
2 comments:
தீபாவளி வாழ்த்துக்கள் மிஸ்டர் திவா. படிச்சுண்டு தான் வரேன். நிறைய தெரியாத விழயங்களை தெரிந்து கொண்டேன் மிக நன்றி.அடிக்கடி வெளியூர் பயணங்கள். ஊருக்கு வரும்பொழுது சந்திக்க முயல்கிறோம்.
வாங்க அக்கா! ரொம்ப நாளாச்சு பாத்து. பூமித்தாய் பயமுறுத்தரதை நிறுத்தினாளா? தில்லி வந்த நண்ப நண்பிகள் என்ன சொன்னாங்க?
ஊருக்கு வந்தா அவசியம் சொல்லுங்க!
Post a Comment