सत्यप्रतिष्ठायां क्रियाफलाश्रयत्वम् ।।36।।
ஸத்யப்ரதிஷ்டா²யாம்° க்ரியாப²லாஶ்ரயத்வம் || 36||
ஸத்ய = ஸத்தியத்தில்; ப்ரதிஷ்டா²யாம்°= நிலை நின்றவன் (முன்னிலையில் அவன் வாக்குக்கு ); க்ரியா = கிரியை; ப²லா = பலனை; ஶ்ரயத்வம் = அடையும் தன்மையுடையதாகிறது.
81 வகை அஸத்தியங்களையும் விலக்கி சத்தியமானது நிலைநாட்டப்பட்டால் (ஸத்தியப்பிரதிஷ்டை இருப்பவன்) சொல்வது பலிக்கும். ஒரு கடைநிலை நபரைப்பார்த்து நீ நல்லவனாவாய் என்றால் அப்படியே நல்லவனாகி விடுவான். நீ சொர்க்கம் போவாய் என்றால் அப்படியே சொர்க்கத்துக்கு போய்விடுவான். இப்படி புதிதாக ஒரு கிரியை அல்லது பலனை தர வல்லவன் சத்ய பிரதிஷ்டை உள்ளவன்.
1 comment:
ஆன்மிகம் ஃ பார் டம்ப்மீஸ் மிக அருமையான வலைப்பூ.
அரிய சங்கதிகளை பொறுமையாகவும், கர்ம சிரத்தையாகவும் தொகுத்துவரும் திவாஜீக்கு ஜே.
Post a Comment