Pages

Tuesday, April 5, 2011

சித்த ஓட்டம்



 चित्तान्तरदृश्यत्वे बुद्धेरतिप्रसङ्गः स्मृतिसंकरश्च ।।21।।
சித்தாந்தரத்³ரு«ஶ்யத்வே பு³த்³தே⁴ரதிப்ரஸங்க³​: ஸ்ம்ரு«திஸம்°கரஶ்ச || 21||

சித்தாந்தர த்³ரு«ஶ்யத்வே = (சித்த விருத்தியானது) வேறொரு சித்த விருத்தியால் க்ரஹிக்கப்படுவதாக ஆகுமானால்; பு³த்³தே⁴ர் = சித்த விருத்தி விஷயமான சித்த விருத்திக்கு; அதிப்ரஸங்க³​: = முடிவில்லாமையும்; ஸ்ம்ரு«தி ஸம்°கரஶ்ச = எல்லா விருத்திகளுக்கும் ஸ்மரணமும் (ஏற்படும்.)

ஒரு பொருளை பார்க்கிறோம். இது பற்றி சித்தம் ஒன்று நினைக்கிறது. அடுத்த கணம் வேறொன்றை நினைக்கிறது. முன் வந்த எண்ணத்தை புதிதாக வந்தது கிரஹிக்குமா? இதை அடுத்து வரும் சித்த விருத்தி கிரஹிக்குமா? இப்படி நிகழும் என்று ஏற்றுக்கொண்டால் இது ஒரு முடிவில்லாத நீழல் ஆகிவிடும். எதுவும் நிர்ணயமும் ஆகாது. ஒவ்வொன்றுக்கும் ஒரு நினைவும் ஏற்படும். நடைமுறையில் ஒரு குடத்தைப்பார்க்கும் போது அதை ஒட்டி எழுந்த நினைவுகள் 'எல்லாமே' நினைவுக்கு வருவதில்லையே! ஆகவே இது சரியில்லை. ஒரு சித்த விருத்தி இன்னொன்றால் க்ரஹிக்கப்படுவதில்லை.

ஒரு எண்ண ஓட்டம் நிகழும் போது ஒன்றை மறந்தே இன்னொன்று வருகிறது. ஜபம் செய்ய உட்காருகிறோம். மனசு அலை பாய்கிறது. ஜபத்தை விட்டு 'இன்று என்ன டிபன்? அடைக்கு அரைத்துக் கொண்டு இருந்தார்களே? அப்ப அடைதான் டிபன்; அது நமக்கு ஒத்துக்கொள்வதில்லையே? வயிறு வலிக்கும்; அட! டாக்டர் பில் கட்ட மறந்தே போச்சு; அடுத்த வீட்டு பையனுக்கு டாக்டர் சீட் கிடைச்சு இருக்காமே..' இந்த ரீதியில் எண்ணத்தொடர் சம்பந்தமில்லாமல் போய் கொண்டே இருக்கும். ஒரு சித்த மாற்றம் மற்று ஒன்றை கிரஹிக்கும் எனில் ஜபத்தை விட்டு வெளியே வந்ததுமே அட ஜபத்தை விட்டு விட்டோம் என்று நினைவு வந்து மீண்டும் ஜபத்துக்கு போய் விடுவோம். அப்படி நிகழ்வதில்லை. சிறிது நேரம் போனால் இப்படி என்னவெல்லாம் எண்ணம் எழுந்தது என்பதும் நினைவில் இல்லாமல் போய் விடும்.


2 comments:

Geetha Sambasivam said...

ஒரு சித்த மாற்றம் மற்று ஒன்றை கிரஹிக்கும் எனில் ஜபத்தை விட்டு வெளியே வந்ததுமே அட ஜபத்தை விட்டு விட்டோம் என்று நினைவு வந்து மீண்டும் ஜபத்துக்கு போய் விடுவோம். அப்படி நிகழ்வதில்லை. //

இங்கே புரியலையே?? குழப்பம்.

பல முறை ஜபம், அதாவது ராமநாமம் சொல்லும்போது அதை விட்டு விட்டு வேறெங்கோ போகும் மனத்தை இழுத்துப் பிடித்துக்கொண்டு வருவேன், கஷ்டத்தோடு தான், மறுபடி ராம ஜபத்தில் ஈடுபடக் கொஞ்சம் நாழி ஆகும், என்றாலும் இது தினசரி நடவடிக்கை. ஆனால் இங்கே அப்படி ஜபத்துக்குப் போக மாட்டோம்,அது நிகழ்வதில்லை என்றால்???? புரியலை!

திவாண்ணா said...

நீங்க சொல்கிறது சரிதான் இதைத்தான் நானும் சொல்கிறேன். சற்று நேரம் கழித்துதானே ஜபத்தை விட்டது தெரிகிறது? உடனே தெரியவில்லையே. அதான் இங்கே கவனிக்க வேண்டியது. ஒரு சித்த வ்ருத்தி இன்னொன்றை கிரஹிக்கும் என்றால் ஜபம் விட்டவுடனேயே அதை தெரிந்து கொண்டு மீண்டும் ஜபத்துக்கு வருவோம். ஆனால் அப்படி நடக்காமல் வேறு ஏதேதோ யோசித்து - அப்படி சொல்லும்போதே ஜபத்தை மறந்துவிட்டோம் என்றூ புரிகீறதல்லவா?- அப்புறம் மட்டுமே திரும்பி ஜபத்துக்கு வருகிறோம்.