60. ப்ராணாயாமம் பத்தி சொல்லுங்க.
அதை தனியா விரிவாகவே பார்க்கலாம். இப்போதைக்கு மனசை ஒரு முகப்படுத்த அது உதவுதுன்னு தெரிஞ்சா போதும்.61. சரி போகட்டும். எங்கே இருந்து கொண்டு ஜபம் செய்யணும்?
சந்த்யா கர்மா ஆரம்பிச்ச இடத்துக்கு 40 அடி தூரத்துக்குள் ஒரு இடத்தில செய்யணும். வீடுன்னா வசதியான இடம், பூஜை அறை, அக்னி உபாசனை செய்துகொண்டு இருந்தா அந்த இடம். இவை நல்லது.62. வேற?
நதி தீரத்தில செய்தால் 2 மடங்கு பலன் கிடைக்கும். பசுக்கள் கட்டின இடமானா 10 மடங்கு. அக்னி சாலை 100 மடங்கு; புண்ய க்ஷேத்திரமானால் 1000 மடங்கு; நல்ல புராதனமான பூஜைகள் வெகு காலம் நடந்த சகோவிலானால் கோடி மடங்கு.இடத்தை சுத்தி செய்து கொண்டு நீரால் ப்ரோக்ஷணம் செய்து ஆசனத்தில் உட்கார வேண்டும்.
63. ஆசனம்ன்னா நாம் எது மேலே உட்காருகிறோமோ அதுவா இல்லை உட்காருகிற விதமா? எந்த ஆசனம் நல்லது?
இரண்டுக்குமே ஆசனம்ன்னுதான் பெயர்.ஆசனம் இல்லாமல் பூமியில் உட்காரக்கூடாது. அப்படி செய்தால் ஜப பலன் நம்மில் தங்காமல் பூமிக்கு போய்விடும். மரப்பலகை (இரும்பு ஆணி இல்லாதது) தர்பங்களால செய்த பாய், கம்பளி,பட்டு ஆகியவை நல்லன. மடியான எந்த துணியும் கூட உபயோகிக்கலாம்.
உட்காருகிற விதத்தை பொருத்து பழக்கமான ஆசனமே சிறந்தது. பத்மாசனம் போன்றவை பழக்கமாக இருந்தால் அவை நல்லன. இல்லாவிட்டால் நாம் சாதாரணமாக தரையில் உட்காரும் ஸ்வஸ்திகாசனமே நல்லது.
64. தரையில் ரொம்ப நேரம் நிமிர்ந்து உட்கார முடியலை. என்ன செய்வது?
இந்த பிரச்ச்சினை நிறைய பேருக்கு இருக்கு. உட்காரும் பழக்கமும் இல்லை. ஒரு வழி இருக்கு. கீழே உட்கார்ந்து கொண்டு முன் பக்கம் அப்படியே வளையணும்... நெத்தி தரையை தொடுகிறது போல... அதுக்குன்னு வீணா முதுகை கஷ்டப்படுத்தக்கூடாது. :-) அப்புறம் நிமிர்ந்தா சரியா இருக்கும்.
65. அட ஏன் அப்படி?
கீழே நாம உட்காரும்போது தொடை, ப்ருஷ்டம் ஆகியவற்றில் தசைகள் வேலை செய்து கொண்டு இருக்கும். நாம சரியா உடகாராது போது இவை அந்த டென்ஷனிலேயே இருக்கும். அதனால் சீக்கிரம் வலி ஏற்பட்டு சரியாக நிமிர்ந்து உட்கார முடியாமல் உடம்பை வளைக்கிறோம்.முன்னால் நன்றாக சாயும்போது இந்த தசைகள் ரிலீஸ் ஆகி தளர்வாகிடும். அப்போ வலிக்காது. மேலே இங்கே பாருங்க.
3 comments:
ஆசனம் ஆரம்பிக்கும் முன் இந்த மந்திரத்தைச் சொல்வோம்
ப்ரிதிவியா: மேரு ப்ருஷ்ட ரிஷி: (தலை)
அனுஷ்டுப் சந்த: (மூக்கு)
கூர்மோ தேவதா: (இதயம்)
ஆசனே விநியோக:
என்று பூமியை கை கூப்பி வணங்க வேண்டும்.
பிறகு சுக்லாம் பரதரம் என்று காயத்ரி ஜபம் ஆரம்பிப்போம்.
ஆமாம், சிலர் குடும்ப ஆசாரப்படி இன்னும் அதிக படிகளை செய்கிறார்கள். இங்கே அடிப்படை செயல்களை மட்டும் தொட்டுக்கொண்டு போகிறேன். மந்திரம் சொல்லி பூமியை உதைத்து அங்குருக்கக்கூடிய கெட்ட சக்திகளை துரத்துவதும் உண்டு.
நல்ல விரிவாகப் போகிறது.
Post a Comment