சந்தியா வந்தனம்:
1. யார் சந்த்யா வந்தனம் செய்ய வேண்டும்?
ப்ரம்ஹோபதேசம் ஆன அதாவது பூணூல் போட்டுக்கொண்ட- அனைவரும் செய்ய வேண்டும். 2. அப்போ ப்ராஹ்மணர்கள்தானே செய்ய வேண்டும்?
ம்ம்ம். அப்படி இல்லை. அந்தணர், க்ஷத்திரியர், வைச்யர் ஆகிய மூன்று வர்ணத்தவருக்குமே பூணூல் போட்டுக்கொள்ள அதிகாரம் உண்டு. ஆனால் தற்காலத்தில் அந்தணர் மட்டுமே போட்டுக்கொள்கிறார்கள்.3. ஏன் சந்த்யா வந்தனம் செய்ய வேண்டும்?
பல் தேய்த்தால் பெரிதாக நன்மை ஒன்றும் தெரியாவிட்டாலும் பல் தேய்க்கவில்லையானால் வாய், பல், ஈறு, கெட்டு துர்நாற்றம் வருகிறது; நோய் வருகிறது. அது போல் சந்த்யாவந்தனம் செய்யாவிட்டால் தீமை ஏற்படுகிறது; நோய் நொடி ஏற்படுகிறது. அதை தடுக்க சந்த்யாவந்தனம் செய்ய வேண்டும்.4. வேறு காரணம் உண்டா?
சந்த்யாவந்தனம் செய்யும் வரை ப்ராம்ஹணத்துவம் நிலைக்கும்; விட்டு விட்டால் நிலைக்காது. சந்த்யா உபாசனை இல்லாமல் மற்ற தெய்வ காரியங்கள் பித்ரு காரியங்கள் என்ன செய்தாலும் பலன் கிடைக்காது.5. அதென்னது? நீங்களா சொல்லறீங்களா?
சாஸ்திரமே சொல்லுகிறது:விப்ரோ வ்ருக்ஷ: தஸ்ய மூலம் ஹி சந்த்யா |
மூலே சின்னே நைவ புஷ்பம் பலம் வா ||
விப்ரன் எனப்படும் ப்ராஹ்மணன் மரம் போன்றவன். அவனது வேர் சந்த்யை. வேரை வெட்டிவிட்டால் பூவோ, பழமோ கிடைக்காது. சந்தையை விட்ட ப்ராஹ்மணன் செய்யும் காரியங்களுக்கு பலன் இராது.
6. சரி சரி, இன்னும் ஏதாவது?
மனு ஸ்ம்ருதியில்:ரிஷயோ தீர்க்க ஸந்த்யத்வாத் தீர்க்கமாயு ரவாப்னுயு |
ப்ரஞாம் யச: ச கீர்த்திஞ்ச ப்ரஹ்ம வர்சஸ மேவச ||
நீண்ட காலம் சந்த்யாவந்தனம் செய்த மஹரிஷிகள் நீண்ட ஆயுளை அடைந்தனர். அறிவு, நற்பெயர், புகழ், ப்ரஹ்ம வர்சஸ் இவற்றையும் பெற்றனர்.
7. வேதம் என்ன சொல்லுகிறது?
வேதம் சந்த்யை பற்றி 'ஸகலம் பத்ரமச்னுதே' என்கிறது. அதாவது எல்லாவித நன்மையையும் பெறுகிறான்.8. மோக்ஷத்தையே கொடுக்கும்ன்னு யாரோ சொல்லிகிட்டு இருந்தாங்க. அது கொஞ்சம் 'டூ மச்' தானே?
டூ மச் இல்லை. சந்த்யாவந்தனத்தில் வரும் 'அஸாவாதியோ ப்ரஹ்மா; ப்ரஹ்மைவ ஸத்யம்; ப்ரஹ்மைவாஹமஸ்மி' என்ற த்யானம் மோக்ஷ சாதனமாகும். (இந்த சூரியன் ப்ரஹ்மம்; ப்ரஹ்மமே சத்தியம்; நான் ப்ரஹ்மமாகவே இருக்கிறேன்)
7 comments:
brahmaiva satyam .
antha brahmaththai arindhavane brahmanan aavan. athu pirappal andhanan aaka irukkavendum endra niyathi illai.
innoru konaththil anthanar kulathil pirantha perum pakuthiyinar thanathu aacharangalai purakkanithu viduvathu mattumalla, athai igazhvathaiyum kaankirom.
ellaame purva punya paapam vidhithathu.
aadhi deivikam.
subbu rathinam
சந்தியாவந்தனம் குறித்த நல்ல விளக்கங்கள்.
நான் ருத்ர பாராயணம் ஆரம்பித்த முதல் முடிந்த வரை சந்தி செய்கின்றேன். சந்தி செய்யாமல் ருத்ர ஜபம் பலன் தராது இல்லையா? தினமும் மூன்று மணி நேரம் பிரயாணத்தில் கழிப்பதால் பெரும்பாலும் மானசீகமாக தான் சொல்ல முடிகிறது. ஜல அனுஷ்டானங்கள் இல்லத்தில் செய்யும் போது தான் முடிகிறது. செய்யாமல் இருப்பதற்கு இது பரவாஇல்லை என்று தேற்றிக் கொள்கிறேன்.
//
அஸாவாதித்யோ ப்ரஹ்மா; ப்ரஹ்மைவ ஸத்யம்; ப்ரஹ்மைவஹமஸ்மி' என்ற த்யானம் மோக்ஷ சாதனமாகும். (இந்த சூரியன் ப்ரஹ்மம்; ப்ரஹ்மமே சத்தியம்; நான் ப்ரஹ்மமாகவே இருக்கிறேன்)
//
அர்க்க்யம் விட்ட பின்னர் இதை சொல்கிறோம். நான் இதில் இது வரை ப்ரஹ்மைவ ஸத்யம் என்பது சொல்ல விட்டுப் போயிருந்தது. திருத்திக் கொள்கிறேன்.
பிற வர்ணத்தவர் காயத்ரி ஜபம் சொல்வது பற்றி காஞ்சி பரமாச்சார்யாள் சொன்னதை படித்தது ஞாபகம் வருகிறது. வேறு வர்ணத்தவர் ஒருவர் சுவாமிகளிடம் வந்து தான் காயத்ரி சொல்லலாமா என்று கேட்டாராம். அதற்கு சுவாமிகள் உனக்கு எத்தனை பெண்கள் எனக் கேட்க அவரும் மூன்று என்றாராம். உன் பெண்களுக்கு சந்த்யா, சாவித்திரி, காயத்ரி என பெயரிட்டு அவர்களை அப்படி கூப்பிடு. காயத்ரி ஜப பலன் கிடைக்கும் என்றாராம். அதைப் போலத் தானே நாமும் உபஸ்தானத்தில் நான்கு திசைகளையும் வணங்கி சந்த்யாயை நமஹா, சாவித்திரியை நமஹா, காயத்ரியை நமஹா, சரஸ்வதியை நமஹா என்று கூறுகிறோம்.
சூரி சார், வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! விதி வலியது!
ஸ்ரீநிவாஸ், நல்வரவு. உள்ள நிலையில் நன்றாகவே செய்து வருகிறீர்கள். இதைத்தான் நாஅனும் வலியுறுத்தி வருகிறேன். "நம்மால் முடியாது என்று விட்டுவிடாதே; எவ்வளவு செய்ய முடியும் என்றே பார்"
'ப்ரஹ்மைவ ஸத்யம்' எங்கே புகுந்தது என்று தெரியவில்லை. ஆரம்ப காலம் முதலே சொல்லி வருகிறேன். தற்போது பார்க்கும் புத்தகங்களில் காணவில்லை. காணாவிட்டாலும் அது சத்தியம்தானே? :-))
அழகான விளக்கம். மிக்க நன்றி. என் மகனுக்கு ப்ரம்மோபதேசம் செய்ய இருக்கும் இந்நேரத்தில் அவனுக்கு விளக்க உத்வியாயிருக்கும்.
நல்வரவு உமா! எப்போ பூணூல் போடறிங்க? தேவையானா முன்னாலேயே முழு பதிவையும் அனுப்பறேண். விஷயம் புரிஞ்சு செய்யறது இன்னும் பலன் தரும்!
நல்ல விளக்கங்களுக்கு நன்றி.
Post a Comment