Sunday, May 22, 2011
உண்மை....
உண்மை என்பது உண்மையில் இல்லை. அது நாம் செய்கிற முடிவில் இருக்கிறது.
ஒரு யூத மூதாட்டி விமானத்தில் அமர்ந்திருந்தாள். ஒரு ஸ்வீடன் நாட்டுக்காரர் அருகில் உட்கார்ந்தார். அவரையே மூதாட்டி முறைத்து பார்த்துக்கொண்டு இருந்தாள். சற்று நேரம் கழித்து " நீ யூதன்தானே?” என்று கேட்டாள்.
“இல்லை அம்மா, நான் யூதன் இல்லை"
இன்னும் சற்று நேரம் சென்றது. மீண்டும் " நீ யூதன்தானே?” என்று கேட்டாள்.
“இல்லவே இல்லை அம்மா, நான் நிச்சயம் யூதன் இல்லை"
இன்னும் கொஞ்ச நேரம் அவரையே முறைத்தபின் மூன்றாம் முறையாக அதே கேள்வியை கேட்டாள்.
அலுப்பு தட்டிய ஸ்வீடன் நாட்டுக்காரர், "ஆமாம் அம்மா, நான் யூதன்தான்" என்றார்.
அவரை மீண்டும் ஏறிட்டு பார்த்துவிட்டு மூதாட்டி சொன்னாள், “ ஆனால் பார்க்க நீ அப்படி தோன்றவே இல்லை!"
முதலில் ஏதேனும் முடிவு செய்து விடுகிறோம். அப்புறம் அந்த முடிவு கிடைக்க ஏதோ ஒரு வழியை கண்டு பிடிக்கிறோம்.
Labels:
*குட்டிக்கதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
முதலில் ஏதேனும் முடிவு செய்து விடுகிறோம். அப்புறம் அந்த முடிவு கிடைக்க ஏதோ ஒரு வழியை கண்டு பிடிக்கிறோம்.//
"உண்மை....""உண்மை....""உண்மை...."
ஆமாம் , ஆமாம் , ஆமாம்
ஆனால் காரணம் என்ன ?
பயமா ? , பற்றா , ஏன் அப்படி ?
//"உண்மை....""உண்மை....""உண்மை...."// :-))))
ஆனால் காரணம் என்ன ?
பயமா ? , பற்றா , ஏன் அப்படி ?//
கார்த்திக் இது மனிதனின் விசித்திர குணங்களில் ஒன்று! மனசில இவன் யூதன், ஆனா பாத்தா அப்படி தோணலை ன்னு மனசில வந்தாச்சு.. அப்புறமா என்ன சொன்னாலும் தான் நினைச்சபடியே நடக்கணும் ன்னு எதிர்பார்ப்பு...
ம்ம்ம்ம் அந்தக் கிழவியும் யூதக் கிழவி இல்லையா? அதனால் தன் இனம் என்று தோன்றி இருக்கும்.
//ம்ம்ம்ம் அந்தக் கிழவியும் யூதக் கிழவி இல்லையா? அதனால் தன் இனம் என்று தோன்றி இருக்கும்.//
அது சரி! அப்படின்னா ஏன் உடனேயே அதை ரிஜக்ட் செய்யணும்?
Post a Comment