சிப்பி ஒன்று கல்லிடுக்கில் முத்தை பார்த்தது. இன்னும் சற்று நேரத்தில் மனிதன் முத்து குளிக்க வருவான் என்று அதற்குத்தெரியும். கஷ்டப்பட்டு முத்தை கல்லிடுக்கில் இருந்து எடுத்து ஒரு இலை மீது வைத்தது. முத்தை பார்த்து ஆசைப்பட்டு அதை எடுத்துக்கொண்டு தன்னை விட்டு விட்டு போவானல்லவா?
முத்தெடுக்க மனிதன் வந்தான். அவன் பார்வை சிப்பிகள் மீதே இருந்தது. பக்கத்தில் இருந்த முத்தை பார்க்கக்கூட இல்லை. சிப்பியை எடுத்துப்போனான்.
முத்து மீண்டும் நழுவி பாறை இடுக்கில் மறைந்தது.
நமக்கு என்ன பார்க்க வேண்டும் என்று சரியாகவே தெரியும். அதனால்தான் நாம் கடவுளை பார்ப்பதில்லை.
5 comments:
நமக்கு என்ன பார்க்க வேண்டும் என்று சரியாகவே தெரியும். அதனால்தான் நாம் கடவுளை பார்ப்பதில்லை.///
மனித மனம். விசித்திரமானது.
//
:-))
ஆமாம்!
பார்க்க நினைத்தாலும் இருக்கிற இடம் தெரியலையே, என்ன பண்ணலாம்?
மத்த இடத்த பாக்கிறதை விட்டுடலாம்... :-)
நமக்கு என்ன பார்க்க வேண்டும் என்று சரியாகவே தெரியும். அதனால்தான் நாம் கடவுளை பார்ப்பதில்லை.//
கடவுளைப் பார்க்க வேண்டும் என்று நினைக்காமலா இருப்போம்?? பார்க்கத் தான் நினைப்போம். ஆனால் கடவுளும் முத்தைப் போல் அருகேயே இருப்பதால் தெரியறதில்லை.
Post a Comment