சட்ட திட்டங்கள் கடவுளின் புனித எண்ணம். அதனால் அவற்றை அப்படியே
கடைபிடிக்க வேண்டும் என்றார் அந்த பிரசங்கி.
மாஸ்டர் காதில் இது விழுந்தபோது அவர் சொன்னார்:
என்ன முட்டாள்தனம்! சட்ட திட்டம் நாம் பொறுத்துக்கொள்ள வேண்டிய கொடுமை! எவ்வளவு முடியுமோ
அவ்வளவு அதை வெட்டிப்போட வேண்டும். சட்ட திட்டத்தை பிடிக்கும் என்று சொல்லும் ஆசாமியை
காட்டு; ஒரு முட்டாள் கொடுங்கோலனை நான் காட்டுகிறேன்.
பின் ஒரு கதையை சொன்னார். அவருடைய சகோதரி தன் குழந்தைக்கான தள்ளுவண்டியை
தள்ளி தள்ளி களைத்து அலுத்துவிட்டார். அதனால் aதில் ஒரு சின்ன மோட்டாரை பொருத்திக்கொண்டார்.
அதன் பின் போலீஸ் வந்தது. இந்த மோட்டார் தள்ளு வண்டி மணிக்கு
மூன்று மைல் வேகத்தில் செல்லக்கூடியது. அதனால் அது மோட்டார் வாகன சட்டங்களுக்கு கட்டுப்பட்டது.
சரி, அதனால்?
அதனால் அதற்கு ரிஜிஸ்தர் செய்து நம்பர் பலகை பொருத்த வேண்டும்;
விளக்குகளும் ப்ரேக்கும் இருக்க வேண்டும்; ஓட்டுவதற்கு லைசென்ஸ் வாங்கியாக வேண்டும்!
இதை ஒட்டியே இன்னொரு கதை சொன்னார். மாஸ்டரை பார்க்க ஒரு விண்வெளி
வீர் வந்தார். அவர் விண்கலத்தில் 500 முறை பூமியை வலம் வந்தார்.
அந்த அனுபவம் எப்படி இருந்தது என்று கேட்டார்கள்.
களைத்துபோய் விட்டேன். எத்தனை முறை காலை, மதிய, மாலை வழிபாடுகளை
என் மதம் சொல்லிய படி செய்வது?