இயற்கையின் வாயிலாக இறைத்தன்மை எப்படி கசிந்தோடுகிறது என்பதை சொல்லுவது மாஸ்டருக்கு மிகவும் பிடிக்கும். ஒரு நாள் பூங்காவில் அமர்ந்து இருந்த போது திடீரென்று சொன்னார்:
அதோ பார்; அந்த நீலப்பறவையை. அந்த மரத்தின் கிளையில் மேலும்
கீழும் மேலும் கீழும் ஊசலாடிக்கொண்டு தன் நிலை மறந்து பாடிக்கொண்டு இருக்கிறது. தன்னைத்துறந்து
உலகத்தை தன் இசையால் நிறைக்கிறது; மகிழ்ச்சியில்
கொஞ்சம் கூட குறைவில்லை. ஏன் எனில் அதற்கு நாளை என்பது கிடையாது!
No comments:
Post a Comment