மாஸ்டருக்கு முல்லா நசருதீன் கதைகள் மிகவும் பிடிக்கும். அவருக்கு மிகவும் பிடித்த கதை இது:
ஓரிரவு முல்லா தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டு இருந்தார்.
அவரது மனைவி,” தூங்குங்களேன், என்ன பிரச்சினை?” என்றார்.
”எதிர்வீட்டு அப்துல்லாவுக்கு நாளை ஆறு
வெள்ளி காசு திருப்பிக்கொடுக்கணும்; எங்கிட்ட காசு இல்லே. அதான்!”
மனைவி எழுந்தார். வாசலுக்குப்போய் ”அப்துல்லா
அப்துல்லா!” என்று
கத்தினார்.
அப்துல்லா வெளியே வந்து, ”என்ன விஷயம்?” என்று கேட்டார்.
” தோ பாருங்க; முல்லாகிட்ட இப்ப காசு இல்லே. அதனால நாளைக்கு உங்களுக்கு கடனை திருப்பித்தர
முடியாது.”
அத்துடன் திரும்பி வந்தார். ”நசருதீன் இப்ப நீ நிம்மதியா தூங்கு, அப்துல்லா தூக்கம் வராம அவஸ்தை படட்டும்!”
அத்துடன் மாஸ்டர் சொல்லுவார்: ”யாராவது பணம்
இல்லாம இருக்கணும். அதுக்கு யாரும் அவஸ்தை படணுமா என்ன?”
No comments:
Post a Comment