சமயம் சார்ந்த கட்டுரைகளை எழுதி வந்த ஒருவர் மாஸ்டரை சந்தித்து ஏதேனும் சிந்தனை ரத்தினத்தை சொல்லுமாறு வேண்டினார்.
மாஸ்டர் சொன்னார்: சிலர் ஒரு வாழ்கைக்கு சம்பாதிக்க எழுதுகிறார்கள்.
சிலர் தங்களது சிந்தனைகளை வெளிப்படுத்தவோ படிப்பவரது மனதை யோசனையில் ஆழ்த்தவோ எழுதுகிறார்கள்.
இன்னும் சிலர் தன் ஆன்மாவை புரிந்து கொள்ள எழுதுகிறார்கள். இது எதுவும் நீண்ட காலம்
தாக்குப்பிடிக்காது…… எழுதாவிட்டால் தலை வெடித்துவிடும் போல யார் உணர்கிறார்களோ அவர்களது
எழுத்தே காலத்தை தாண்டி நிற்கும்……. அவர்கள் எதைப்பற்றி எழுதுகிறார்கள் என்பது முக்கியமில்லை.
எதை எழுதினாலும் அதில் தெய்வீகம் வெளிப்படும்!
No comments:
Post a Comment