பறவைகளின் தொல்லை மிக அதிகமாகிவிட்டது. குடியானவர்கள் சிலர் சேர்ந்து பல பறவைகளை சுட்டு வீழ்த்தினர்.
வயலில் வீழ்ந்து கிடந்த ஏராளமான பறவைகளை பார்த்த சீடன்
ஜீசஸின் வாக்கியத்தை முணுமுணுத்தான்: “ஒரு
பறவை கூட தந்தையின் ஒப்புதல் இல்லாமல் விழுவதில்லை”. மாஸ்டரிடம் கேட்டான் : “இதுக்கு எதாவது அர்த்தம் வருதா?”
அழகான அர்த்தம் இருக்கு; ஆனா அதை பார்க்க வேண்டிய கோணம்
வேற. லட்சக்கணக்கில பறவைகள் உருவாகி தொல்லையா மாறுகிற பின்புலத்தில அதை நீ
பார்த்தா அதன் அழகு புலப்படும்.
No comments:
Post a Comment