சீடர்
விடேன் தொடேன் என்று அதே
கேள்வியை கேட்டுக்கொண்டு
இருந்தார்.
சாவுக்கு
அப்புறம் வாழ்வு இருக்கா?
மாஸ்டர்
சொன்னார்: “நீ
இந்த கேள்வியிலேயே நிக்கறது
ஆச்சரியமா இருக்கு!”
“ஆச்சரியம்
என்ன இதில?”
ஜன்னலுக்கு
வெளியே கையை காட்டி சொன்னார்:
“இதோ பாரேன்!
உன் எதிரே
அருமையான வசந்த கால நாள்
இருக்கு. இதமான
வெயில்; பறவைகளின்
பாட்டு;
மலரும்
பூக்கள். இயற்கையை
ரசிக்கறதை விட்டுட்டு நாளைக்கு
என்ன கிடைக்குமோன்னு இருக்கியே!
இப்ப கிடைக்கற
சுவையான சாப்பாட்டை சாப்பிட
மாட்டேன்னு சொல்ற குழந்தை
மாதிரி இருக்கே! முதல்ல
உனக்கு தினமும் கிடைக்கற
உணவை சாப்பிடு!”