ஸரஸ்வதி
/ ஆயுத
பூஜை வாழ்த்துகள்!
நாளை
விஜய தசமி.
முன்
காலத்தில் அரசர்கள் ஒரு
பழக்கம் வைத்து இருந்தார்கள்.
விஜயதசமி
அன்று பக்கத்து நாட்டுக்குள்
கொஞ்ச தூரமாவது ஆக்கிரமித்துவிட்டு
திரும்புவார்களாம்.
சாதாரணமாக
முடியாததை சாதிக்க முயற்சி செய்ய வேண்டும்
என்ற பழக்கம் விட்டுப்போகக்கூடாது
என்று கோட்பாடு!
நம்மில்
பலரும் கூட ஆன்மீகம் எல்லாம்
பெரிய விஷயம்.
நமக்கெல்லாம்
சரிப்படாது என்று நினைக்கிறோம்.
அப்படி
இல்லை.
ஆன்மா
இருக்கும் அனைவருக்கும்
ஆன்மீகம் அவசியம்தானே!
இன்றைக்கு
அதை கொஞ்சமாவது புரிந்துக்கொள்ள
ஒரு முயற்சியை செய்யலாம்!
ஆன்மீகம்
இல்லைன்னாலும் வேறு எதையாவது
முயற்சி செய்யலாம்.
இது
வரை இது நமக்கு சரிப்படாது
என்று நினைத்த ஒன்றை முயற்சி
செய்யலாம்!
முயற்சி
வெற்றி பெற வாழ்த்துகள்!
No comments:
Post a Comment