என்னை
வாழ்த்துங்கள் மாஸ்டர்!
எதுக்கு?
கடேசியா
எனக்கு ஒரு நல்ல வேலை கிடைச்சாச்சு;
முன்னேற்றத்துக்கு
நல்ல வாய்ப்புகளோட!
ஹும்!
நேத்து வரை
நீ தூக்கத்தில நடந்து கொண்டு
இருந்தே. இன்னைக்கும்
தூக்கத்தில நடக்கிறே!
நாளைக்கும்
தூக்கத்தில நடப்பே. உன்
கடைசி நாள் வரை தூக்கத்தில
நடந்து கொண்டு இருப்பே.
அது என்ன
முன்னேற்றம்?
நான்
ஆன்மீக முன்னேற்றத்தைப்பத்தி
சொல்லலை மாஸ்டர்; பொருளாதார
முன்னேற்றத்தைப்பத்தி
சொன்னேன்!
ஓ!
ஒரு பேங்க்
அக்கவுண்ட்டோட தூக்கத்தில
நடக்கிற மனுஷன்!
முழிச்சுகொண்டு
இருந்தாத்தானே அதையும்
அனுபவிக்க முடியும்?
No comments:
Post a Comment