நிறைய
பேர் ஸரஸ்வதி பூஜை அன்னிக்கு
படிக்கக்கூடாதுன்னு நினைக்கிறாங்க.
நண்பர்
மோஹனரங்கன் படிக்கறதுதான்
நிஜமா சரஸ்வதிக்கு செய்யற
பூஜைன்னு வருஷா வருஷம் கட்சி
கட்டுவார். ஆனா
யாரும் ஒத்துக்கறா மாதிரி
தெரியலை! இந்த
’படிக்ககூடாது’ கதை ஸ்கூல்
பசங்களுக்காக யாரோ கட்டிவிட்ட
கதைன்னு சந்தேகம்!
பின்ன
என்னதான் சமாசாரம்?
சரஸ்வதி
படம் வைக்கிறோம். இவள்
வாக் - படிப்புக்கும்
- அதிபதி
என்கிறதால புத்தகங்களையும்
வைக்கிறோம். இதில்
தேவதா ஆவாஹனம் செய்கிறோம்.
- அஸ்மின்
புஸ்தக மண்டலே சரஸ்வதிம்
த்யாயாமி.... ரைட்.
இப்ப பூஜை
செய்கிறோம். சாதாரணமா
யாரும் புனர் பூஜை இன்னைக்கு
செய்யறதில்லை. மத்த
பூஜைகள் மாதிரி பூஜை முடிந்த
உடனே யதாஸ்தானம் செய்யறதும்
இல்லை. அடுத்த
நாள் புனர் பூஜை செய்துவிட்டுத்தான்
யதாஸ்தானம் செய்வார்கள்.
தேவதா
ஆவாஹனம் ஆகி இருக்கும் வரை
அதை டிஸ்டர்ப் செய்யக்கூடாது
இல்லையா? அதனால
இந்த புத்தகங்களை இப்ப எடுத்து
படிக்கக்கூடாது. மத்த
புத்தகங்களை படிக்க தடை
எதுவும் இல்லை. இல்லவே
இல்லை!
No comments:
Post a Comment