மாஸ்டரை
ஞானம் குறித்து யாரோ கேட்டார்கள்.
அது
ஒரு விழிப்பு என்றார்.
“இப்போ
நீ தூங்கிகிட்டு இருக்கே;
அதனால அது
தெரியலை, புரியலை!”
மேலும்
புதிதாக திருமணம் செய்து
கொண்ட பெண்மணி தன் கணவனின்
குடிப்பழக்கத்தைப்பற்றி
புகார் சொன்னதைப் பற்றி
சொன்னார்.
“அது
சரி! அவர்
குடிக்கிறார்ன்னா நீ ஏன்
அவரை கல்யாணம் செஞ்சு கொண்டே?”
“அவருக்கு
அந்த பழக்கம் இருக்கறது
தெரியாது! ஒரு
நாள் ராத்திரி குடிக்காம
அவர் வீட்டுக்கு வந்தப்பத்தான்
தெரியும்!”
No comments:
Post a Comment