ஒரு
விஞ்ஞானி நவீன அறிவியலின்
சாதனைகளைப் பற்றிய டாக்குமெண்டரி
ஒன்றை மாஸ்டருக்கு காட்டினார்.
“இதோ பாருங்கள்.
இப்போது
நாங்கள் பாலைவனத்தில் நீரூற்றி
சோலையாக்க முடியும்.
நயாகரா நீர்
வீழ்ச்சியை கட்டுப்படுத்தி
சக்தியை சேமிக்க முடியும்.
தொலை தூரத்தில்
இருக்கும் நக்ஷத்திரத்தின்
தன்மையை இங்கிருந்து கணிக்க
முடியும். அணுவின்
கூறுகளை ஆராய முடியும்.
சீக்கிரத்தில்
நாங்கள் இயற்கையை வென்று
விடுவோம்.”
மாஸ்டருக்கு
பிரமிப்பு ஏற்பட்டாலும்
சிந்தனை வயப்பட்டார்.
பின்னால்
சொன்னார்: “இயற்கையை
ஏன் வெல்லனும்? அது
நம் நண்பன்.இருக்கும்
ஆற்றலை எல்லாம் வெல்ல முடியாத
ஒன்றை வெல்வதில் காட்டினால்
என்ன? பயம்!
பயத்தை
எப்போது வெல்லப்போகிறோம்?”
No comments:
Post a Comment