இப்படி
காரியங்களை செய்தாலும்
சொன்னாலும் கூட தடைகள்
இருக்கின்றன.
சிலதை
சொல்லுகிறோம்.
ஆனால்
ஒருவனுக்கு காதே கேட்கவில்லை.
இன்னொருவன்
அலட்சியமாக இருக்கிறான்;
நினைவில்
கொள்ளவில்லை.
மற்றவன்
அவித்தேயன்;
சொன்னதை
எப்போதும் செய்யாதவன்.
இன்னொருவன்
அஞ்ஞானி;
சொன்னதை
புரிந்து கொள்ள முடியாதவன்.
இது
போன்று உள்ளவர்களுக்கு சொல்வது
பொருந்தாது.
இந்த
சாதாரண உரைகளிலேயே இப்படி.
அது
போல வேதத்திலேயும் அதை
சொல்லுபவர்கள் இடத்திலே அதை
கற்றபவர்கள் மத்தியில் -
அதாவது
எப்படி இருக்க வேண்டும்?
தத்–விஜ்ஞானார்தம்
ஸ குரும் ஏவாபிகச்சேத்.
ஸமித்–பாணி:
ஶ்ரோத்ரியம்
ப்ரஹ்ம–நிஷ்டம்.
(முண்டக
உபநிஷத்
1.2.12)
குருவின்
இலக்கணத்தையும் சிஷ்யன்
எப்படி சமித் பாணியாக ….
சமித்
பாணியாக என்றால்
கையில் சமித்துடன் என்று உட்
பொருள் இல்லை;
சமித்
எப்படி ஆஜ்யத்தையும் அதன்
மூலம் அக்னியையும் க்ரஹிகிறதோ
அது போல ஆச்சார்யன் க்ருபைக்கு
பரிபூர்ண சத்பாத்திரமாக
இருக்கிற யோக்யதையைத்தான்
அது இங்கே சுட்டிக்காட்டுகிறது.
அது
போல குரு சீடன் இலக்கணம்
தகுந்த சத் பாத்திரங்களால்
நிவேதிக்கப்பட்டு தகுந்த
சத்பாத்திரங்களில் அருந்தவம்
ஏற்ற கலம் என்பர்.
அதை
(வேதத்தை)
அறிந்த
ஏற்ற கலமாக உள்ள ஆசான்கள்
வழங்கி அருந்தவமாக இருக்கும்
மாணாக்கர்கள் பெற்றால்தான்
வேதம் பரிமளிக்கும் என்று
வேதத்தின் இலக்கணத்தை
பெரியவர்கள் வைத்திருக்கிறார்கள்.
என்பர்-
அது
போல இருந்து கற்றால் தான்
வேதம் பலனளிக்கும்.
இன்னொன்று:
வேதத்தில்
இந்த மந்திரங்கள் இருக்கும்
போது இத்தனை வேதங்கள் இவ்வளவு
சம்பிரதாயங்களும இருந்தும்
அந்நிய படையெடுப்பு வந்தது.
கோவில்கள்
தரை மட்டமாகின.
தீக்கிரையாகின.
கலாசார
அழிவுகள்ல் எல்லாம் என் வந்தன?
இதை
எப்படி எதிர் கொள்ளப்போகிறோம்?
இவற்றுக்கு
விடையை பின்னால் பார்க்கலாம்.
வேதத்தில்
இருக்கின்ற இத்தனை ஆற்றல்களும்
நிரூபாதிகமா சபாதிகமா?
யார்
சொன்னாலும் சொன்ன மாத்திரத்தில்
பலிக்குமா?
தீ
என்று தெரியாமல் கையை வைத்தாலும்
அது சுடும்.
அமிர்தம்
என்று தெரியாமல் பருகினாலும்
அது அதன் வேலையை செய்யும்.
ஆகவே
அறிந்தோ அறியாமலோ எப்படி
சொன்னாலும் நன்மை பயக்க
வேண்டும்.
"இங்ஙனே
சொன்ன ஓர் ஆயிரத்து இப்பத்து
எங்ஙனே சொல்லிலும் இன்பம்
பயக்குமே.–7-9-11-
" என்பது
போல.
அது
இங்கே வேதத்தின் கடுமையான
விதிகளுக்கு பொருந்தாது.
எப்படி
வீணையின் நாதம் கை தேர்ந்த
ஒருவனின் கை விரல்களின்
ஆலத்தியாலே தான் விரும்பிய
வண்ணம் எல்லாம் எண்ணம்
உவந்திருக்கின்ற இடங்களுக்கு
எல்லாம் இணையாக தானாக அது
செல்வது போலே;
அவன்
விரும்பி இருக்கின்றனவற்றை
எல்லாம் தானும் கற்று
மற்றவர்களுக்கும் தரக்கூடியவன்
வேத சப்தங்களிலே அர்த்தங்களிலே
பாவங்களில் தத்துவங்களில்
நிறைந்த சாதகத்தை செய்து
இருக்கிற தபஸ்,
ஸ்வாத்யாயம்
பிரம்மச்சரிய நித்ய நிஷ்ட
நியமனாக இருக்கும் ஒருவனே
அதை இயக்க முடியும் அதனால்
அது ஒரு
உபாதியினால் இருப்பது.
யார்
சொன்னாலும் எப்படி சொன்னாலும்
வருவது என்பது பகவன் நாமாக்களுக்கும்
மிக உயர்ந்த நிலையில் இருக்கிற
பக்தி பிரபத்தியிலும்தான்
பொருந்தும்.
வேத
சப்தங்களில் அதை இயக்கக்கூடிய
யோக்கியதை இருப்பவர்கள்
இயக்கினால்தான் அது பொருந்தும்.
No comments:
Post a Comment