வித்தியாசமான
வேறு ஒரு கோணத்தில் இருந்து
பார்க்கும்போது கெட்டது
நல்லதே; பாபம்
என்பது அருளுக்கு ஒரு வாயில்
என்றார் மாஸ்டர்!
சீடர்கள்
திகைத்துவிட்டார்கள்.
மாஸ்டர்
சொன்னார்: கார்தேஜ்
பழைய ரோம சாம்ராஜ்யத்துக்கு
ஒரு முள்ளாக இருந்தது.
கடைசியில்
ரோம் அதை முற்றிலுமாக
அழித்துவிட்டது. அதன்
பின்னரே அது அமைதியாக இருக்க
முடிந்தது… கூடவே அது மெதுவாக
ஊளை சதையும் அழுகலுமாக
நாறத்தொடங்கிவிட்டது!
உலகத்தில்
கெட்டது என்று ஒன்றே இல்லாமல்
போகுமானால் மனித உள்ளம்
அழுகக்கூடும் என்றார் மாஸ்டர்!
No comments:
Post a Comment