Pages

Wednesday, February 28, 2018

கிறுக்கல்கள் - 178





ஒரு தெளிவான நிர்மலமான ஆகாசம் இருக்கும் இரவில் சீடர்களை மாஸ்டர் அழைத்துப்போய் தன் வானவியல் பாடத்தை துவக்கினார்.

"அதோ பாருங்கள் அதுதான் ஆண்ட்ரொமெடா சுருள் காலக்ஸி. அது நம் பால்வீதியைப்போலவே பெரியது. அது தன்னிடமிருந்து ஒளிக்கற்றைகளை அனுப்புகிறது. உங்களுக்கே தெரியும்; ஒளி ஒரு வினாடிக்கு 1,86,000 மைல்கள் செல்கிறது. ஆண்ட்ரொமெடாவின் ஒளி நம்மை வந்து அடைய இரண்டரை மில்லியன் ஆண்டுகள் ஆகிறது. அதில் நூறாயிரம் மில்லியன் சூரியன்கள் உள்ளன. அவற்றில் பல நம் சூரியனைவிட பல மடங்கு பெரியவை.”

மாஸ்டர் ஒரு சில வினாடி மௌனத்துக்குப்பின் குறும்பு சிரிப்புடன் சொன்னார்: "இப்போது பிரபஞ்சத்துடன் ஒப்பிட்டால் நாம் எங்கே இருக்கிறோம் என்று புரிந்ததல்லவா? வாருங்கள் படுக்கப்போகலாம்!”

Tuesday, February 27, 2018

கிறுக்கல்கள் - 177





இது மட்டுமே, வேறு எதுவும் உண்மையில்லை என்று நினைக்கும் எல்லா திடமான நம்பிக்கையாளருக்கும் - நம்பிக்கை மதத்திலோ அரசியலிலோ அல்லது பொருளாதாரத்திலோ, எப்படி இருந்தாலும்- மாஸ்டரின் செய்தி ஒன்றாக இருந்தது.

ஒருவருக்கு தேவையானது முழு பாதுகாப்பு அல்ல; சூதாடியின் துணிச்சல். திடமான நிலத்தில் நிற்பது அல்ல; நீச்சல்காரரின் நெகிழ்வு!

Monday, February 26, 2018

கிறுக்கல்கள் - 176





"சத்தியத்தை அடைவதில் உள்ள பெரிய தடை என்ன?"

"நிதர்சனத்தை ஒப்புக்கொள்ள மறுப்பது!" என்றார் மாஸ்டர்.

உதாரணத்துக்கு ஒரு குட்டிக்கதை சொன்னார்.  
ஒரு குண்டு பெண்மணி எடை பார்க்கும் கருவியை விட்டு கீழே இறங்கி சொன்னார்: இந்த உயரம் காட்டும் கருவியின் பட்டியல்படி நான் இன்னும் ஆறு இன்ச் வளரணும்!

பின்னர் இன்னொரு பெண்மணி பற்றி சொன்னார்: அவர் எடை பிரச்சினையை சுலபமாக தீர்த்துவிட்டார்; எடை பார்ப்பதை நிறுத்திவிட்டார்!

Friday, February 23, 2018

கிறுக்கல்கள் - 175





சீடர் கேட்டார்: "கடவுளை செயலில் எப்படி அறிவது?"
மாஸ்டர் சொன்னார் "உன் வேலை உனக்கு என்ன தரும் என்பதைப்பற்றி சிந்தனை இல்லாமல் அதை நேசி.”

அதை செயல்படுத்த நினைத்த சீடரால் அதை சாதிக்க முடியவில்லை.

மாஸ்டர் சொன்னார்: ஒரு ஆசாமி கோடி ரூபாய் கொடுத்து ஒரு சித்திரத்தை வாங்கினார். பின் அதற்கு கொடுத்த காசோலையை வங்கி பெற்று 'கான்சல்' செய்த பிறகு அதை வாங்கி சட்டமிட்டு சுவரில் மாட்டினார்.

அவர் விரும்பியது சித்திரத்தை இல்லை; அவருடைய பணக்காரத்தனத்தை வெளிக்காட்டிகொள்வது மட்டுமே.

Thursday, February 22, 2018

கிறுக்கல்கள் - 174





தெய்வீகத்தை பார்க்க முடியுமா என்று ஒருவர் கேட்டார்.

இப்போதே பார்த்துக்கொண்டுதானே இருக்கிறாய்? என்றார் மாஸ்டர்.

பின்னே ஏன் அதை உணரமுடியவில்லை?

ஏன் என்றால் உன் எண்ணங்களால் அதை விகாரப்படுத்திக்கொள்ளுகிறாய்!

புரியவில்லையே!

சைபீரிய குளிர் காற்று வீசும்போது தண்ணீர் இறுகிப்போய் கனமான பனிக்கட்டிகளாக மாறிவிடுகிறது.

எண்ணங்கள் குறுக்கிடும்போது சத்தியம் கோடிக்கணக்கான கண்டதுண்டமாகி 'பொருட்களாக' ஆகி விடுகிறது!

Wednesday, February 21, 2018

கிறுக்கல்கள் - 173





அந்த கோடீஸ்வரர் "அந்த கிழட்டு முட்டாளுக்கு லோகத்தில் இருக்கிற இன்பத்தை அனுபவிப்பது பற்றி கொஞ்சம் சொல்லிக்கொடுக்கப்போகிறேன்; இனியாவது மடத்தின் கையறு நிலையில் வாழ்க்கையை வீணடிக்காமல் இருக்கட்டும்" என்று சபதம் இட்டுக்கொண்டு மடாலயத்துக்கு வந்தார்.

இதை கேட்ட சீடர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அவர்களுக்கு மாஸ்டர் உலகத்தின் நல்ல விஷயங்களை மாஸ்டர் நன்கு அனுபவிப்பது தெரியும்!

ஒரு சீடர் சொன்னார்: 'அந்த கிழட்டு முட்டாளுக்கு லோகத்தில் இருக்கிற இன்பத்தை அனுபவிப்பது பற்றி கொஞ்சம் சொல்லிக்கொடுப்பது' மீனை பிடித்து அதை குளிப்பாட்டுவது போல!

Tuesday, February 20, 2018

கிறுக்கல்கள் - 172





மாஸ்டர் ஆதரித்தது புத்தியால் அறிய முயற்சி செய்யாத, எண்ணங்கள் இல்லாத த்யானம் என்று மக்களுக்கு தெரிய வந்தது.

மாஸ்டரை ஒருவர் கேட்டார்: “புத்தி இல்லாமல் எப்படி சத்தியத்தை அறிவது?”

மாஸ்டர் அமைதியாக சொன்னார்: இசையை அறிவது போலவே!

Monday, February 19, 2018

கிறுக்கல்கள் -171





ஒரு சர்வாதிகாரி நாட்டில் ஆட்சியை பிடித்தார். கடுமையான தணிக்கை நடைமுறைகள் செயலில் இருந்தன. போலீஸார் மாஸ்டரை ஒரு தெருக்கோடியில் நோட்டிஸ்களை வினியோகம் செய்ததாக கைது செய்தனர்.

காவல் நிலையத்தில் அவரது மூட்டையை சோதனை செய்தவர்கள் திடுக்கிட்டனர். ஏனெனில் அதில் இருந்தது வெற்று நோட்டீஸ் தாள்களே!

இதன் அர்த்தம் என்ன என்று மாஸ்டரை கேட்டார்கள். மாஸ்டர் சிரித்துக்கொண்டே சொன்னார்: "இதன் அர்த்தம் ஜனங்களுக்கு புரியும்”!

இந்த நிகழ்ச்சி நாட்டில் வெகுவாக பரவிவிட்டது!

இதனால் பல வருஷங்கள் கழித்து வழிபாட்டுத்தலத்தில் மாஸ்டர் அதே போல வெற்று நோட்டிஸ்களை வினியோகித்த போது அதன் நிர்வாகிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை!

Friday, February 9, 2018

​ ஶிவராத்திரி




​ ஶிவராத்திரி அன்று அமாவாசை சம்பந்தம் இருக்கக்கூடாது என்ற ஆகம விதிப்படி ஆலயங்களில் ​ ஶிவராத்திரி வரும் செவ்வாய்க்கிழமையும், இல்லங்களில் புதன் கிழமையும் அனுசரிக்கப்பட வேண்டும்.