Pages

Friday, January 14, 2022

ஶ்ராத்தம் - 21 ; பார்வண ஹோமம் -3




 

அடுத்ததாக ஆஜ்ய சம்ஸ்காரம். அதாவது நெய்யை சுத்திகரித்து ஹோமத்துக்கு தயார் செய்தல். அக்னிக்கு மேற்கே போட்டிருக்கிற 8 தர்ப்பங்கள் மீது நெய் பாத்திரத்தை வைத்து அதில் அந்த இரண்டு தர்ப்பையை பவித்ரத்தை வைக்க வேண்டும் அதில் நெய்யை நிரப்பவேண்டும் அக்னிக்கு வடக்கே, ஒரு வரட்டியின் மீது 3 துண்டு தணல்களை வடக்கிலிருந்து எடுத்து வைக்க வேண்டும். அதன்மீது பத்திரமாக இந்த நெய் பாத்திரத்தை வைத்து அதன் சூடு படும்படி செய்ய வேண்டும். ஒரு கட்டை தர்ப்பையை கொளுத்தி அதன் மீது காட்ட வேண்டும். பிறகு இரண்டு தர்பைகளின் நுனிகளைக் கிள்ளி - ஒரு சென்டிமீட்டர் போல இருக்கலாம் - அதை அலம்பி நீரில் போட்டு இன்னொருத்தர் தர்ப்பையை கொளுத்தி மூன்று முறை இந்த நெய் பாத்திரத்தை சுற்றி தூக்கிப் போட வேண்டும். பிறகு வடக்கு பக்கமாக இந்த நெய் பாத்திரத்தை கீழே இறக்க வேண்டும். இந்த தணல்களையும் விராட்டி துண்டுகளையும் அக்னியில் சேர்த்துவிடலாம். நான் இந்த விராட்டியை இரண்டாக உடைத்து அக்னி குண்டத்தின் கிழக்குப் பக்க ஓரங்களில் வைத்து விடுகிறேன். ஏன் என்று பிறகு சொல்கிறேன். இந்த நெய் பாத்திரத்தை நமக்கு முன் இருக்கும் தர்பங்கள் மீது வைத்து, இந்த வடக்கு நுனியாக வைத்த பவித்ரத்தை இரண்டு கைகளாலும் ஓரங்களில் பிடித்துக்கொண்டு, நெய்யை மூன்று முறை - கிழக்கில் ஆரம்பித்து மேற்காக, பிறகு மீண்டும் கிழக்காக - இப்படி மூன்று முறை அதை மேலும் கீழுமாக அசைக்க வேண்டும். இதை போக வர அரைப்பது என்பார்கள். பிறகு இந்தப் பவித்திரத்தின் முடிச்சை அவிழ்த்து, ஜலத்தை தொட்டு அதை அக்னியில் கிழக்கு நுனியாக வைத்துவிடவேண்டும்.

 அடுத்ததாக நாம் செய்ய வேண்டியது இந்த ஹோம கரண்டிகளை சுத்தப்படுத்துவது. அவற்றை குழிவான பகுதி அக்னியின் சூடு படும்படி காட்டி, மூன்று தர்ப்பங்களால் அவற்றை துடைத்து, மீண்டும் காய்ச்சி நம் வலது பக்கம் வைத்திருக்கும் தண்ணீரிலிருந்து ப்ரோக்ஷணம் செய்து, அவற்றை நெய் பாத்திரத்தின் அருகில் வைக்க வேண்டும், இதில் பெரிய கரண்டியை வலது பக்கமாகவும் சின்ன கரண்டியை நடுவில் நடுவிலும் வைக்க வேண்டும். பிறகு இந்த துடைத்த தர்பங்களை நீர் தொட்டு அக்னியில் வைத்துவிட வேண்டும்.

 
 

No comments: