உருவ மருவ முருவருவ மூன்றா
முறுமுத்தி யென்னி லுரைப்ப - னுருவ
மருவ முருவருவ மாயு மகந்தை
யுருவழிதன் முத்தி யுணர்.
உருவம் அருவம் உருவருவம் மூன்றாம்
உறும்முத்தி என்னில் உரைப்பன் - உருவம்
அருவம் உருவருவம் ஆயும் அகந்தை
உருஅழிதல் முத்தி உணர்.
சிலர் முத்தி என்பது உருவம் அருவம் உருவருவம் என மூன்று வகை என்பர்.
(அனுபவ
பூர்வமாக நான்) உரைப்பது உருவம் அருவம் உருவருவம்
இவற்றை ஆராயும் அகந்தை தோன்றாமல் நாசமாவதே முத்தி.
रूपिण्यरूपिण्युभयात्मिका च मुक्तिस्त्रिरूपेति विदो वदन्ति ।
इदं त्रयं या विविनक्त्यहन्धी-स्तस्याः
प्रणाशः परमार्थमुक्तिः ॥ ४२ ॥
ரூபிண்யரூபிண்யுப⁴யாத்மிகா ச முக்திஸ்த்ரிரூபேதி விதோ³ வத³ந்தி |
இத³ம்ʼ த்ரயம்ʼ யா விவினக்த்யஹந்தீ⁴- ஸ்தஸ்யா: ப்ரணாஶ: பரமார்த²முக்தி: || 42 ||
सद्दर्शनं द्राविडवाङ्निबद्धं महर्षिणा श्रीरमणेन शुद्धम् ।
प्रबन्धमुत्कृष्टममर्त्यवाण्या-मनूद्य
वासिष्ठमुनिर्व्यतानीत् ॥ ४३ ॥
ஸத்³த³ர்ஶனம்ʼ த்³ராவிட³வாங்நிப³த்³த⁴ம்ʼ மஹர்ஷிணா ஶ்ரீரமணேன ஶுத்³த⁴ம் |
ப்ரப³ந்த⁴முத்க்ருʼஷ்டமமர்த்யவாண்யா- மனூத்³ய வாஸிஷ்ட²முனிர்வ்யதானீத் || 43 ||
ஶ்ரீ ரமண மஹர்ஷியால் தமிழ் மொழியில் இயற்றப்பட்டதும் சுத்தமானதும்
உயர்ந்ததுமான ஸத்தர்ஶநம் என்ற நூலை
தேவர்களில் மொழியில் மொழிபெயர்த்து வாஸிஷ்ட முனி பரப்பினார்.
सत्तत्त्वसारं सरलं दधाना मुमुक्षुलोकाय मुदं ददाना ।
अमानुषश्रीरमणीयवाणी- मयूखभित्तिर्मुनिवाग् विभाति ॥ ४४ ॥
॥ सद्दर्शनं समाप्तम् ॥
ஸத்தத்த்வஸாரம்ʼ ஸரலம்ʼ த³தா⁴னா முமுக்ஷுலோகாய முத³ம்ʼ த³தா³னா |
அமானுஷஶ்ரீரமணீயவாணீ- மயூக²பி⁴த்திர்முனிவாக்³ விபா⁴தி || 44 || ||
நற்தத்துவ ஸாரத்தை ஸரளமாக உட்கொண்டதும் முமுக்ஷு ஜனங்களுக்கு
மகிழ்ச்சியளிப்பதும் (சாதாரண) மானுடத்தன்மையைத் தாண்டியவரான ஶ்ரீ ரமணர் கூறியதுமான இந்த
முனிவரின் வாக்கானது (ஸூர்ய) கிரணங்களால் அமைக்கப்பட்டது போல் பிரகாசிக்கிறது.
ஸத்³த³ர்ஶனம்ʼ ஸமாப்தம்
நிறைவுற்றது.
No comments:
Post a Comment