வினைமுதனா மாயின் விளைபயன்
றுய்ப்போம்
வினைமுதலா ரென்று வினவித் - தனையறியக்
கர்த்தத் துவம்போய்க் கருமமூன்றுங்
கழலு
நித்தமா முத்தி நிலை.
வினைமுதல் நாம்ஆயின் விளைபயன்
துய்ப்போம்
வினைமுதல்ஆர்என்று வினவித் - தனைஅறியக்
கர்த்தத்துவம் போய் கருமம்மூன்றும்
கழலும்
நித்தமாம் முத்தி நிலை.
நான் செயல்களை செய்பவன் என்னும்
நினைப்பு இருந்தால் அந்த வினைகளின் விளைவையும் ஒருவன் அனுபவிக்க வேண்டும். செயல்புரிபவன் யார் என்று
விசாரித்து தன்னை அறிந்து கொள்பவனின் 'நான் செய்கிறேன்' என்னும் பாவனைபோய்விடும். அவனது மூன்று வித கர்மங்களும்
நீங்கும். இதுவே முத்தி நிலையாகும்.
करोमि कर्मेति नरो विजानन् बाध्यो भवेत्कर्मफलं च भोक्तुम् ।
विचारधूता हृदि कर्तृता चेत् कर्मत्रयं नश्यति सैव मुक्तिः ॥ ४० ॥
கரோமி கர்மேதி
நரோ விஜானன் பா³த்⁴யோ ப⁴வேத்கர்மப²லம்ʼ ச போ⁴க்தும் |
விசாரதூ⁴தா ஹ்ருʼதி³ கர்த்ருʼதா சேத்
கர்மத்ரயம்ʼ நஶ்யதி ஸைவ
முக்தி: || 40 ||
No comments:
Post a Comment